எனது நினைவுகளில் 1965 இந்தி எதிர்ப்பு போர்! 1965ல் நான் முதல் வகுப்பு படிக்கிறேன். அலங்காநல்லூர் நடுத்தெருவின் கடைசியில் இருந்தது கூரைப்பள்ளி கூடம். பள்ளிக்கூடத்தை ஒட்டி புளியந்தோப்பு இருந்தது. வகுப்புகளுக்கு இடையே காட்போர்டு தட்டி மட்டுமே சுவராக இருக்கும். அலங்காநல்லூர் வெள்ளிமலைக் குன்றின் தொடக்கத்தில், ஊர் கடைசியில் எங்கள் பள்ளி இருந்தது. அதைத் தாண்டி, ஆண்கள் அரசு உயர் நிலைப் பள்ளி இருக்கிறது. அன்றைக்கு எங்கள் ஊரிலிருந்து ஒற்றையடி பாதையில்…
பழைய நினைப்புடா பேரான்டி 1
-
-
காலந்தோறும் நடிகர்களும் ரசிகர்களும்! ரஜினி, கமல், அஜித், விஜய் நடித்த படம் வரும்போது முதல் காட்சி விசித்திரமா இருக்கும். அவருடைய ரசிகர்கள் அந்தந்த படங்களில் நடிகர்கள் என்ன கெட்டப்பில் வருகிறார்களோ, அதேபோல தங்களையும் மாற்றிக்கொண்டு வருவார்கள். ஒரு திரைப்படம் வந்தால், அந்த படத்தின் நாயகனாகவே மாறிவிடுவது சிறுவர்களின் மனநிலை என்பார்கள். ஆனால், இளைஞர்களிடமும் அந்த மனநிலை இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும். சினிமாவைப் பொருத்தமட்டில் நான் எப்படி இருந்திருக்கிறேன் என்று…
-
கூட்டு வண்டியில் போய் மதுரையில் பார்த்த சினிமா! சின்ன வயசுல நான் முதன்முதலில் பார்த்த சினிமா இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது. மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்தோம். அப்போ எனக்கு அஞ்சு வயசு. மதுரையில் ஆரப்பாளையம் கரிமேடு பகுதி யில் இருக்கிற மோதிலால் தெருவில் அத்தை குடியிருந்தாங்க. மாமா எல்ஐசியில் வேலை செய்தார். அப்போ எல்ஐசி ஆபீஸ் குட்செட் தெருவில் இருந்தது. அன்றைய மதுரை இப்போது மாதிரி இல்லை. வைகை ஆற்றை…
-
கற்பனையை விரித்த கலையரங்கம்! அலங்காநல்லூர் வாழ்க்கையை நினைத்தால் ரொம்ப ஜாலியாக இருக்கும். தாத்தா தொடங்கிய மரக்கடையோடு, விறகுக்கடையும் சேர்த்து வைத்தார் அப்பா. அலங்காநல்லூரிலேயே எங்கள் விறகுக்கடை மட்டும்தான் இருந்தது. பிறகு வேறு சிலர் சின்னதாய் தொடங்கினார்கள். மரம் வெட்டும்போது, சின்னக் கிளைகள் விறகுக்கு நறுக்கப்படும். மா, வேம்பு, கருவேல், சீமைக்கருவேல் விறகுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கும். ஒரு பக்கம் மரத்தை அறுப்பார்கள். மரச்சாமான்களை செய்வார்கள். இன்னொரு பக்கம் விறகு…
-
ஒரு ஊருக்கு மூன்று பாதைகள்! அப்பா பேரு அலங்காரம். அதோடு சாதிப் பேரும் சேத்து வரும். பள்ளிக்கூடத்திலேயே அப்படித் தான் பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஏன்னா, அப்பாவோட தாத்தா பேரு அதுதானாம். அந்தத் தாத்தாவோட பேரு பெருமாள். அதை எனது அப்பாவின் தம்பிக்கு வைத்திருக்கிறார்கள். அதுகிடக்கட்டும். அப்பாவோட பேரைச் சொல்லி அப்பத்தா உட்பட யாரும் கூப்பிட்டதில்லை. மாமனாரு பேரை சொல்லக் கூடாதில்லையா? அதுகூட பரவாயில்லங்க. அலங்காநல்லூர் என்ற பேரைக்கூட சொல்லமாட்டாங்க. அதை…
-
சாமி இல்லாட்டி போகுது… தலக்கட்டு வரியக் குடு! ஊர்ச்சாமி கும்பிட்டு 15 வருஷம் ஆச்சு. கடைசியா 2007ஆம் ஆண்டு முத்தாளம்மன் கோவில், அய்யனார் கோவில் எல்லாத்தையும் புதுப்பித்து, பெயிண்ட் அடிச்சு கும்பாபிசேகம் செய்து சாமி கும்பிட்டாங்க. ஊர்ச்சாமியை வருஷா வருஷம் கும்பிடுவாங்க. அதெல்லாம் இல்லாமப் போச்சு. அதுக்குக் காரணம் என்னன்னா மொதல்ல ஒரு வருஷம் மழை பெய்யலைனா சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. மழை பெஞ்சு நல்லா வெளைஞ்சாலும் சாமி கும்புடனும்னு…
-
முயல்கறி அனுபவம் ஊர்ச்சாமி கும்புடுறதுனு முடிவெடுத்திட்டா, ஊரே குதூகலம் ஆகிரும். அதிலும் மழை தண்ணி செழிப்பா இருந்து, விளைச்சலும் நல்லா இருந்திட்டா சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. எதுக்குச் சொல்றேன்னா, விளைச்சல் நல்லா இருந்தாக் கூட, திருவிழாவுக்கு தலக்கட்டு வரியை கொடுக்க முடியாத குடும்பங்களும் இருக்கும். அந்த மாதிரி குடும்பங்கள் கூலி வேலை செய்து சேர்த்து வச்ச தானியத்தை விற்றுத்தான் தலக்கட்டு வரியை கொடுக்க வேண்டியிருக்கும். தமிழர்களின் பொருளாதார சீரழிவுக்கு இத்தகைய…
-
பாடாய் படுத்திய மீனும், நாட்டுக் கோழியும்! மீனையோ, கறியையோ குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். அல்லது வறுத்து சாப்பிடுவார்கள். இதுதான் எனது சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். இப்போ என்னடானா எது மீன், எது கோழி, எது ஆட்டுக்கறினு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விதவிதமா சமைச்சு தர்றாங்க. அந்த வெரைட்டியைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி, என்னோட அசைவ உணவு அனுபவம் குறித்து கொஞ்சம் சொல்றேன். என் வீட்டில் அப்பாவுக்கு ஆட்டுக்கறி மட்டும்தான் பிடிக்கும்.…


