கட்டாயம் வேண்டும் ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாகீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து “அய்யா!” என்றான். அவன் வயது பன்னிரண்டு இருக்கும். மேலே கிழியாத சட்டை; கீழே கிழிந்த துண்டு; இரண்டும் அவ்வளவாக அழுக்குப் படவில்லை. மெலிந்த உடல்; ஆனாலும் நலம் கெடவில்லை; முகத்தில் ஒருவகை மலர்ச்சி; கண்களில்…


