விடுதலைப் போராட்டத் தலைவர்கள் 3 - ஆதனூர் சோழன்



 ஆச்சாரியா வினோபா பாவே

 (செப்டம்பர் 17, 1895-நவம்பர் 17, 1982)

இந்தியாவின் மகத்தான புதல்வர்களில் ஒருவரான வினோபா பாவே 1895ல் மஹாராஷ்டிராவில் உள்ள  கோலாபா என்னுமிடத்தில் ஒரு சித்பவன பிராமண குடும்பத்தில் பிறந்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் விடுதலை தாகம் கொண்டவராக வளர்ந்தார். படிப்பில் சிறந்தவரான அவர் கணிதப்பாடத்தில் முதல் மாணவராக விளங்கினார். ஆனால் நாட்டிற்கு சேவைசெய்வதிலேயே அவரது நாட்டம் இருந்தது. அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்த அவர், தனது அனைத்து சான்றிதழ்களையும் தீயிட்டு கொழுத்திவிட்டு காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார்.

பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் மிகத்தீவிரமாக பங்கேற்றார். விரைவிலேயே காந்தியின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் முக்கிய சீடர்களில் ஒருவராக வினோபா பாவே மாறினார். அப்பழுக்கற்ற வாழ்க்கை, உயரிய சிந்தனை ஆகிய காந்தியின் கோட்பாடுகளே வினோபாவின் தாரக மந்திரமானது. காந்தியின் வழிகாட்டுதலின் பேரில் சர்வோ தயா இயக்கத்தை வினோபா துவக்கினார். நாடுமுழுவதும் இதைப் பரப்பினார். சமூகத்தில் தாழ்த்தப் பட்ட ஜாதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவோம் என்று நாடுமுழு வதும் பிரச்சாரம் செய்தார். பூதான இயக்கத்தை துவக்கிய அவர், நிலமற்ற ஏழைகளுக்கு, நிலம் வைத்திருப்போர் தான மாக கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். மராத்தி மொழியில் கீதையையும், இந்தி மொழியில் கீதா பராஞ்சா  என்ற நூலையும், பூதான் யோஜனா என்ற நூலையும் எழுதினார். பாரத ரத்னா விருதும், மகசேசே விருதும் பெற்றவர் அவர். 1982ல் மறைந்தார்.

The great son of India, Vinoba Bhave was born in 1895 at Kolaba in Maharashtra in a Chitpavan Brahmin Family. From his childhood he was independent in nature and character. He was very good in his studies, particularly in Mathematics. But his desire to serve the nation was so strong that he burnt all his certificates and went to Gandhi’s ‘Sabarmati Ashram.’

Later, he actively participated in the ‘Civil Disobedience Movement’. Very soon, Vinoba Bhave became  a part of the set followers and disciples of Gandhi whose principle of plain living and high thinking became Bhave’s motto in life. Under the guidance of Gandhi he started ‘Sarvodaya Movement’ all over India and spread the message for the upliftment of the lower castes and the weaker and backward classes in society. He started ‘Bhudan Movement’ and urged the people to donate some land to the landless. He wrote many books like ‘Gitai’ (Marathi), ‘Gita Parrancha’ (Hindi), ‘Bhudan Yojna’. He was awarded the Bharat Ratna and Magsaysay Award. He died in 1982.

Previous Post Next Post

نموذج الاتصال