Trending - Viral

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இதை எப்படி கட்டியிருப்பார்கள்?

இது சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பெயின் நாட்டில் உள்ள அன்டெக்வேராவில் (Antequera) உள்ள மெங்கா (Menga) என்ற பகுதியில் வாழ்ந்த புதிய கற்கால மக்கள் மக்கள் உருவாக்கிய தங்கும் இடம்.  ஐரோப்பா கண்டத்தின் மிக பிரம்மாண்டமான வரலாறின் அடையாளமாக கிடைத்துள்ள நினைவுச்சின்னங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்த தங்கும் இடத்தின் உட்புறம் சுமார் 25 மீட்டர் அதாவது சுமார் 75 அடி நீளம் இருக்கிறது. இதன் மேற்கூரை பெரிய கல் தூண்கள் மீது இருக்கிறது. அந்த மேற்கூரை ஐந்து பிரம்மாண்டமான கல் பாளங்களால் மூடப்பட்டுள்ளது.

அந்த ஐந்து கல் பாளங்களில் மிகப்பெரிய கல்லின் எடை சுமார் 150 டன்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கற்கள் சுமார் 850 மீட்டர் தொலைவில் இருந்த கல் குவாரியிலிருந்து, சறுக்கு வண்டிகள் (sledges) மூலம் கவனமாக அமைக்கப்பட்ட சரிவுப் பாதையில் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புதிய கற்காலச் சமூகத்தினரிடம் மேம்பட்ட பொறியியல் அறிவு இருந்ததா என்பது இப்போது ஒரு மர்மம் அல்ல. நிச்சயமாக அவர்களிடம் அந்த அறிவு இருந்தது. ஆனால், எழுத்து வடிவிலான திட்ட வரைபடங்கள் ஏதுமின்றி, அவர்கள் எவ்வாறு இந்த அறிவை வளர்த்தார்கள். அதை எப்படி நடைமுறைப்படுத்தினார்கள். அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்த அறிவை எப்படிக் கடத்தினார்கள் என்பதுதான் விடை தெரியாத கேள்விகளாக இருக்கின்றன.

#DolmenDeMenga #AncientEngineering #Archaeology #Neolithic #HistoryMysteries

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *