வரலாறுனா அதை மாத்தி எழுதிட்டா வரலாறும் மாறும்னு நினைக்கும் அதிமேதாவிகளான மோடி கும்பலுக்கு ஒரு வரலாறை நினைவூட்டுவோம்.
1789ல் தொடங்கிய பிரெஞ்சுப்புரட்சி 1793-94 ல் உச்சத்தை அடைந்தது பற்றி பள்ளிகாலத்திலேயே பாடமாக இருந்தது. அதற்கு முன்னாலேயே காந்தியாரை அவரது அறவழி அஹிம்சை போராட்டம் பசுமரத்தாணி போல பதிந்திருந்ததால்… ஃப்ரெஞ்சு புரட்சியின் முடிவில் லூயி 16ம் அவன் ராணி மேரியும் கொ.ல்லப்பட்டார்கள்னு படித்த போது புரட்சிக்காரர்கள் ஒன்றும் பெரிய ஹீரோக்கள் இல்லை. வன்முறையாளர்கள்னு அந்த வயதில் தோன்றியது. ஆனால் அந்த 2 வருடங்களுக்குள்ளான காலத்தில் கில்லெட்டீனை வச்சி.. அல்லது அரசு பயங்கரவாதத்தை சட்டப்பூர்வமானதாக்கி கிட்டத்தட்ட 50000 பேர்களை லூயி 16 கொ..றிருக்கிறான். ஆகவே லூயியை பழிக்கு பழியாக மட்டுமே செய்யாமல் இனியும் இன்னொரு லூயி 16 எங்குமே வரக்கூடாதுனு மக்கள் எடுத்த முடிவு அதுன்னு வயது ஆக ஆகத்தான் புரிந்தது.
காந்தியை விட்டுட்டு இவனுக வரலாறை மாத்தறேன்னு கோட்சேவையும், சாவர்க்கரையும் தேசப்பிதாக்களாக மாற்றினால்… அதன் பின் மோடி-அமித்ஷா போன்ற பாசிச வாதிகள் தொடரமுடியாது. ஏனென்றால் மக்களும் அஹிம்சையெல்லாம் அன்லியர்ன் பண்ணிட்டு துப்பாக்கி-சதி வேலைகள்தான் சரின்னு நம்ப ஆரம்பிப்பாங்க.
காந்தியாரால்தான், காந்தியாரின் வரலாறை பாடங்களாக வைத்திருப்பதால் தான் 150 கோடி மக்களும் வன்முறை தவறுனு நம்பறாங்க.
கடந்த விவசாயிகள் போராட்டத்தில் கிட்டத்தட்ட 1000 விவசாயிகள் பலியான போதும் அவர்கள் வன்முறையில் இறங்கவில்லை.. ஆனால் இப்போது களத்தில் நிற்பது அதே விவசாயிகளின் பிள்ளைகள் வாரிசுகள். போராட்டத்தை வன்முறை களமாக மாற்ற ஏற்கனவே டெல்லி கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்துத்வா தீவிரவாதிகளை களமிறக்கி வன்முறையாக்கிய அதே கோழைத்தனத்தை மோடி தொடர்கிறார். பிள்ளைகள் மேல் வன்முறை பாய்ந்தால் போராட்டம் யுத்தமாகும். ஒட்டுமொத்த இந்தியாவும் கிளர்ந்தெழும். 150 கோடியில் வெறும் 1% ரோட்டில் இறங்கினாலும் போலிஸ், ராணுவம் ஒரு ம்ம்ம்ம்ம்மைறும் புடுங்கமுடியாதுனு மோடிக்கே தெரியும்.
ஆனால் மோடி தன்னை லூயி 16-ஆக நினைத்துக்கொள்ளும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன..
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் என்று வாய்கிழிய பேசும் இந்த நாட்டில், மோடி கும்பலின் ஏவற்படையான டெல்லி போலீஸ் மற்றும் துணைராணுவம் நடத்தியிருக்கும் இந்த அராஜகத்தைப் பாருங்கள்!
அக்டோபர் 10 அன்று லூயின்னு தன்னைத்தானே நம்பிக்கொண்டு மோடி ஏவிய போலீஸ் படை நடத்திய காட்டுமிராண்டித்தனமான வேட்டையாடலுக்கு எல்லையே இல்லை. போராடியவர்கள் யார், அரசியல் தலைவர்கள் யார், மாநில அரசுப் பிரதிநிதிகள் யார் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், அங்கே நின்ற வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், ஏன்… சம்மந்தமே இல்லாமல் அந்தப் பக்கம் போன பொதுமக்களையும் சேர்த்து ஆயிரக்கணக்கில் மிருகத்தனமாக அள்ளிக்கொண்டு போய் அடைத்திருக்கிறார்கள்!
அதிகாரத் திமிரிலும் போலீஸ் பலத்திலும் ஆடிக்கொண்டிருக்கும் இந்த மோடி கும்பலின் அத்தனை அடக்குமுறைகளும், மிரட்டல்களும், தடைகளும் இன்று ஏறக்குறைய மண்ணாகியிருக்கின்றன!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் என்ற ஏவல் ய்நா விலகும் வரை ஓயப்போவதில்லை என்று துணிச்சலோடு நெஞ்சை நிமிர்த்தி நின்ற சாதாரண சாமானிய ஆண்களும் பெண்களும், இந்த பாசிச போலீசின் முட்டாள்தனமான அதிகார பலத்தை தங்களின் விடாமுயற்சியால் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்!
மக்களை மிரட்டி பணிய வைக்கலாம் என்ற உங்கள் அதிகாரக் கொழுப்பு இனி செல்லுபடியாகாது. மக்கள் சக்திக்கு முன்னால் உங்கள் போலீஸ் படையும் தோற்றுப்போகும், உங்கள் ஆளும் கும்பலும் மண்டியிடும்!
#ModiFascism#DelhiPoliceShame#GyaneshKumarResign#DictatorshipInIndia#PeoplePower#DownWithFascism



