இது ரயில் இல்ல சென்னையோட எதிர்காலத்தை கட்டி எழுப்பிய ஒரு தலைமுறையின் கையெழுத்து சரித்திரத்துல மறக்க முடியாத ஒருவரோட கையெழுத்து…
கலைஞர் மெட்ரோ திட்டத்தைக் கொண்டு வந்தார். அதை அவர் வண்ணாரப்பேட்டையிலிருந்து துவங்க வேண்டுமென உத்தரவிட்டார். அதுதான் மிகச் சிறப்பான ஒன்று.
பலருமே சென்ட்ரலிலிருந்து ஏர்போர்ட் வரை(இரு மாறுபட்ட பாதைகளில்) போதுமென்றே வலியுறுத்தினார்கள். வண்ணாரப்பேட்டை மிக மிக நெரிசலான பகுதி. அங்கிருந்து குடைவது பெருந்தலைவலி. ஏகப்பட்ட Oil பைப்கள் பூமிக்கடியில் ஓடுகின்றன. போக மெட்ரோ என்பது வசதியான, படித்த, நாகரீகமான மக்கள் பயணிக்க வல்லது. வண்ணாரப்பேட்டை கூலித் தொழிலாளர்கள், எளிய மக்கள் நிறைந்த பகுதி. அவர்களுக்கு மின்சார ரயில், பேருந்து, ஷேர் ஆட்டோக்கள் போதுமானவை என்று கலைஞரிடம் சொன்னார்கள்…
அவருக்குத் தெரியாதா?
வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம் இந்த இடங்களில் கலைஞரின் காலடி படாத இடமில்லை. ராயபுரம் ராபியன்சன் பூங்காவில் துவங்கப்பட்ட திமுக, மண்ணடி பவளக்காரன் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட திமுக அலுவலகம், மின்ட், NSC Bose சாலை, லோட்டஸ் ராமசாமி தெரு என்று கலைஞர் தன் சினிமா & கட்சி சார்ந்து இளமை முழுக்க இங்கு உழன்றவர் !
எதனால் அவருக்கு வண்ணாரப்பேட்டையில் மெட்ரோவைத் துவங்க வேண்டுமென்று நன்கு தெரியும். அவர் பிடிவாதம் காட்டாவிட்டால் ஒருபோதும் வடசென்னைக்கு மெட்ரோ வரவே வராது அல்லது இப்போதைக்கு வராது என்றும் தெரியும் !
கலைஞரின் திட்டம் பலித்தது. சென்னையின் முதல் மெட்ரோ வண்ணாரப்பேட்டை to விமான நிலையம், வழி மண்ணடி, ஹைகோர்ட் பின் சென்ட்ரல் என முடிவானது. அன்று அவர் போட்ட கையெழுத்தை நடைமுறைக்கு கொண்டுவர ஸ்டாலின் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கொஞ்சமல்ல…
அவருடைய முயற்சிக்கு இந்த வீடியோவே சாட்சி…


