சில அமைப்புகளே செய்ய முடியாத உதவிகளை தனது நல்லெண்ணத்தால் சாதித்துக் காட்டியிருக்கிறார் தென்கொரியாவில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் டாக்டர் பேராசிரியர் ஆரோக்கியராஜ். தமிழக அரசின் கல்வித் திட்டத்தில் பெற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தென்கொரியாவில் பணிபுரியும் ஆரோக்கியராஜ், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தை சேர்ந்த ஏழைக் குடும்பங்களின் முதல்தலைமுறை பட்டதாரிகள் 9 பேருக்கு உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார். இப்போது அவர்கள் அனைவரும் நல்ல பணிகளில் இருக்கிறார்கள். இதுகுறித்து அவரிடம் புதியமுகம்…