கருப்பையும் சிவப்பையும் பிடிக்காதவர்கள் யாராச்சும் இருக்க முடியுமா? கருப்பு தந்தை பெரியார் கற்பித்த சுயமரியாதையின் அடையாளம். சிவப்போ பொதுவுடமைத் தத்துவத்தின் அடையாளம். இந்த இரண்டு வண்ணங்களும் இணைந்ததே திராவிட முன்னேற்றக் கழகமாக உதயமானது. ஆனால், இப்போது எனக்கு கருப்பின் மீதும், சிவப்பின் மீதும், இளஞ்சிவப்பான காவியின் மீதும் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு படரத் தொடங்கியிருக்கிறது. காவிகள் தங்கள் பிரித்தாளும் அரசியலில் தீவிரம் காட்டுகிறார்கள். அதாவது அவர்கள் தங்களுடைய நோக்கத்தில் தெளிவாக…


