இந்தக் கோடை ஒரு முழுப் பகலை சுடச்சுட பொறித்து முன்னே வைக்கிறது பிட்டுத் தின்னும் ஆசையில் கைவைத்துவிடாதீர் அது ஆறுவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது! இந்தக் கோடை வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் போல வந்தது என்றான் அவன் போதாதற்கு நதி கொள்ளை போனதெப்படியென அபிநயம் பிடித்துவேறு காட்டுகிறான் இல்லையில்லை பசித்த புலியைப் போல வந்ததெனச் சொல்லி கிணறுகளையும் ஊற்றுகளையும் கழுத்தில் கவ்வி வெயில் இழுத்துச்சென்றதை கால்நடுங்க விவரிக்கிறான் வேறாருவன் ஏளனச் சிரிப்புடன்…
கவிதை
-
-
ஆம், இன்று துயரத்தின் நாள்கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது சிம்மாசனத்தில்இதயமோ அதன்முன் மண்டியிட்டுவைரம்போல் சுடரும் கண்ணீர்த்துளிகளைகப்பம் கட்டிக்கொண்டிருக்கிறது சுண்டக்காய்ச்சிய துயரத்தை என் குவளையில்மீள மீள நிறைத்துக்கொண்டிருக்கிறதொரு பாடல்கால்கள் பின்னும் போதையிலும்அடுத்த குவளைக்கு நீள்கிறதென் கை துயரத்தின் அருங்காட்சியகத்துக்குஎவ்வளவு தூரமெனக் கேட்டேன்உன் கருவறை வாசலுக்கும்கல்லறைச் சுவருக்குமான தூரமெனஅசரீரி எழுகிறது யாசகம் கேட்டுவந்தது பெருந்துயரம் மிச்சமின்றி அப்படியேஇதயத்தை அள்ளிப்போட்டுவிட்டேன் அவள் மட்டும் என்னைக் கட்டித்தழுவி முத்தமிட்டுக்காட்டித்தராமல் போயிருந்தால்கடைசிவரை துயரத்துக்குஎன்னை அடையாளம்தெரியாமலே போயிருந்திருக்கும் நெடுந்தொலைவு பயணித்து வந்திருந்தது…


