“என்னால் மட்டும் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகளை தொடர முடிந்தால் எப்படி இருக்கும்?” கார்ல் மார்க்ஸின் கனவாக இது இருந்தது. அது கனவாகவே தொடர்ந்தது. அந்த அளவுக்கு அவரை வறுமை ரவுண்டுகட்டி அடித்துத் துவைத்தது. உலகை புரட்டிப் போட்ட ‘மூலதனம்‘ நூல் எழுதப்பட்ட சூல்நிலையை அறிந்தால், அது நிஜமாகவே ஒரு மனித விஞ்ஞானச் சாதனையாகும். 1848 ஆம் ஆண்டு புரட்சி ஒடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்க்ஸ் குடும்பம் இங்கிலாந்தில் குடியேறியது. அவர்கள் வாழ்க்கைக்கு…


