1969 பிப்ரவரி மாதம் 3 ஆம் நாள் அண்ணா மறைந்தார். பஞ்சாயத்து ரேடியோ எங்கள் வீட்டில்தான் இருக்கும். பேட்டரியில் இயங்கக்கூடியது. ஒரு ஸ்பீக்கர் வேறு கட்டியிருப்பார்கள். அண்ணா மரணமும், அதைத் தொடர்ந்து சோக இசையும் ஒலிக்கத் தொடங்கியது. ஊர் மந்தையில் பரபரப்பாகியது. அண்ணா படம் வைத்து அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், எல்லா ஊர்களிலும் பாடையில் ஒரு உருவ பொம்மையை வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.…


