தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அமைப்பான உலக தமிழ்ச் சங்கம், 1986ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் நாள் (14.04.1986) அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்களால் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இச்சங்கமானது, உலகில் பல நாடுகளில் அந்தந்த நாட்டு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தமிழ் ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றை ஒரு குடையின்கீழ் பதிவு செய்து தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு…


