உள்ளதை உள்ளபடி ஆவணப்படுத்துவதும் புரிந்ததையும் புரியாதவற்றையும் அறிவு நேர்மையுடன் சோர்வின்றி விளக்கிச் சொல்வதும்தான் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் அறிவுச் சொத்து. அந்த வகையில் ‘பெரியய்யா’ என்று பயிற்சி மாணாக்கர் அனைவராலும் அழைக்கப்பட்ட குமரேச ஸ்தபதியாரின் மாணவர் ஜெயராமனின் குறிப்பேடுகளை ஆதாரமாகக் கொண்டு கணேஷ் ஸ்தபதி, வை.பாலசுப்ரமணியன் ஸ்தபதி ஆகிய இருவரும் இந்த நூலை உருவாக்கி உள்ளனர். இவர்களது முயற்சிக்கு இரண்டு பெரிய சிற்பிகளான பாஸ்கரன், இராசேந்திரன் ஆகியோர்…


