விரட்டப்பட வேண்டியவர்களை விரட்டுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது… தேர்தல் 7 கட்டங்களாக நடப்பதும் முதல்கட்டத் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்க 45 நாட்கள் காத்திருக்க வேண்டியதும் சர்ச்சையாகி இருக்கிறது… இந்தியா குடியரசாகி முதன்முதல் நடைபெற்ற பொதுத்தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்கள் நடைபெற்றது… அதுதான் மிக அதிகமான நாட்கள் நடைபெற்ற தேர்தல்… அதற்கு அடுத்தபடியாக 2014 மக்களவை தேர்தல்தான் ஏப்ரல் 7 முதல் மே 12…


