கேதார்நாத் பாண்டே முதல் ராகுல் சாங்கிரித்யாயன் வரை… அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே. கிழக்கு உத்தரப்பிரதேசம் அசம்கார் மாவட்டத்தில் உள்ள பண்டாஹா என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். ஆரம்பப்பள்ளி கல்வியை கற்றிருக்கிறார். என்ன காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறினார் என்று தெரியவில்லை. மிகச் சிறிய வயதிலேயே வெளியேறிவிட்டார். வாரணாசிக்கு சென்று, அங்கு…