தியானம் என்பது வாழ்வின் மீதான காதலை அழிக்கும் மோசடி! தியானம் மென்மையானது.. அற்புத சக்திகளை தரவல்லது, மேலான பேரானந்தத்தை தரவல்லது என்று அனேகமாக எல்லா மதங்களும் எல்லா வழிகாட்டிகளும் கூறுகிறார்கள். அதை மறுத்து கூறுவது பற்றி சிந்திக்கக்கூட முடியுமா என்று பலரும் எண்ணக்கூடும். தியானத்தை புனிதப்படுத்தி அதைப்பற்றி ஆராய்வதே ஒரு பாவகாரியமாக்கி விட்டார்கள். நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் கூறுவதால் மட்டும் அது பற்றி நாம் பூரணமாக விளங்கி இருக்கிறோம்…


