இளமை ஊஞ்சலாடுகிறது என்ற திரைப்படம் வெளியான சமயம். தியேட்டர்களில் கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் செய்த அலப்பறையும் மோதல்களும் மிகப்பெரிய செய்திகளாக பரபரத்தது. இதையடுத்து ரஜினிக்கு போன் செய்து அழைத்தார் கமல்… “நமக்கென்று தனி அடையாளம் இருக்கிறது. இனி நாம் தனித்தனியே படங்கள் செய்வதுதான் நமது வளர்ச்சிக்கு நல்லது. நமது ரசிகர்களுக்கும் நல்லது.” கமல் யோசனையை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார் ரஜினி. தமிழ் சினிமாவில் எம்ஜியார் சிவாஜிக்கு பிறகு, கமலும் ரஜினியும்…


