அறிவியல்

இயற்கையான முறையில் தலைமுடி பாரமரிப்பு முறைகள் என்ன…?

இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவை குழைத்து கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதைநன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம்  ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போய்விடும்.

தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில்காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெய்யைத் தலையில்  தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி தேங்காய்ப்பால், தேங்காய்எண்ணெய் சேர்த்து குழைத்து தலையில் மசாஜ் செய்யவும். அரை  மணிநேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

ஒரு பங்கு சீயக்காய் வெந்தயம் கால் பங்கு பச்சைப்பயறு அரைப்பங்கு புங்கங்காய்கைப்பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப்  பொருள்கள் இல்லாத பொடி எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது.

பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சமஅளவு எடுத்து பொடி செய்து பசும் பாலில் குழைத்து தலையில் தடவி ஊறிய பின்  குளித்தால் விரைவில் குணம் தெரியும்.

தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும்போது சீயக்காய்த் தூளுடன்தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில்உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கிவிடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.நெல்லிக் காயையும், ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத்தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப்  போக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *