கிரவுண்ட்ஹாக் என்பது அமெரிக்காவின் பென்சில்வேனியா, கனடா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஒரு விலங்கு. அணில் வகையைச் சேர்ந்த சற்று பெரிய விலங்கு இது.
கொறித்து உண்ணும் வகையைச் சேர்ந்த இந்த விலங்கை வைத்தே தங்கள் பகுதியில் பனிக்காலம் முடியுமா? வசந்தகாலம் வருமா என்று ஒரு காலத்தில் மக்கள் முடிவு செய்தார்களாம்.
இந்த விலங்கின் பெயரால் ஆண்டுதோறும் பிப்ரவரி 2ஆம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவில் கிரவுண்ட்ஹாக் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த நாளில் தனது இடத்திலிருந்து வெளிவரும் கிரவுண்ட்ஹாக் விலங்கு, சூரியனுக்கு எதிராக நின்று தனது நிழல் தரையில் விழுந்தால் பனிக்காலம் மேலும் நான்கு வாரங்களில் முடியும் என்கிறார்கள்.
ஒருவேளை நிழல் விழவில்லை என்றால் வசந்தகாலம் விரைவில் வரும் என்று நம்புகிறார்கள்.
அதாவது விலங்கின் நிழலைப் பயன்படுத்தி வானிலையை கணித்தார்கள்.

இந்த நாளை வைத்து ஹாலிவுட்டில் பில் முர்ரே நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவந்தது.
டைம்லூப் அடிப்படையில் முதன்முதலில் வெளிவந்த திரைப்படம் இது. அதாவது கதாநாயகன் பிப்ரவரி 2 ஆம் தேதியிலேயே திரும்பத்திரும்ப வாழ்வான். தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் இந்த அடிப்படையில் வந்ததுதான்.ல் முர்ரே மட்டும்தான் அந்த ஒரே நாளில் இருப்பார். அதைப் பயன்படுத்தி தனது காதலை வெளிப்படுத்த முயற்சிப்பார். நகைச்சுவையாக செல்லும் இந்தப் படத்தில் பில் முர்ரே மற்றும் அவருடைய காதலி வானிலை அறிவிக்கும் குழுவினராக நடித்திருப்பார்கள்.


