வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம் என்றும் மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என்றும் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் பங்கேற்கும் எந்த போராட்டத்திலும் திமுக பங்கேற்காது என்று அறிவித்திருந்த நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கீழ்கண்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
#SIR-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரிக்க வேண்டும்.
ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு திமுக முழு ஆதரவு வழங்கும்.
வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு (EVM-க்கு) மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்.
தீவிர வாக்குத் திருத்தம் (SIR) விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டையும், த.வெ.க.வின் மவுனத்தையும் கடுமையாக கண்டிக்கிறோம்.
மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, #SIR ரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



