ஆத்திரம் அறிவுக்கு சத்ரு என்பார்கள். சர்வம் சாந்த மயம் என்று போதிப்பார்கள். புதிய ஆத்திசூடியில் ரௌத்திரம் பழகு என்றார் பாரதி. முடிவு கிடைக்காத விஷயங்களுக்கு தியானத்தில் விடிவு பிறக்கும் என்று ஆன்மீகவாதிகள் நம்புகின்றனர். அசட்டுத்துணிச்சல்தான் ஆத்திர உணர்வுக்கு மூலகாரணம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு அசட்டுத்தனமாக அமைந்து விடக்கூடும் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆத்திரம் மனிதனின் சிந்தனையை குறுக்கிவிடும். அவர்களை நெருக்கடியில் தள்ளிவிடும்…