நியூயார்க்கில் உள்ள கூப்பர்ஸ்டவுனைச் சேர்ந்த போர் வீரரான அப்னர் டபுள்டே என்பவர் பேஸ்பால் விளையாட்டைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. அது ஒரு கட்டுக்கதை. பேஸ்பால் விளையாட்டை கண்டுபிடித்தவர் யார் என்ற உண்மைக் கதை சிக்கலானது. கி.பி. 1800களின் முற்பகுதியில் பேஸ்பால் விளையாட்டு பல்வேறு பந்து மற்றும் குச்சி கொண்டு விளையாடும் விளையாட்டுகளில் இருந்து அது உருவாகி இருக்கலாம். இங்கிலாந்தின் கிரிக்கெட் அல்லது…


