யாகவேள்வியும் சோமபானமும்! அண்மைக்காலமாக வடநாடுகளில் இருந்து வருகை தந்த பார்ப்பனர்கள் கோவில்களிலும் அரண்மனைகளிலும் பர்ணசாலைகளிலும் ஆடு மாடு குதிரை போன்றவைகளை பலி கொடுத்து அதை யாகம் என்று கொண்டாடினார்கள். அந்த யாகத்தின் இறுதி நிகழ்ச்சியாக சோமபானம் வழங்கப்படும். இங்கு வழங்கப்படும் சோமபானம் மிகவும் உள்ள கிளர்ச்சி அளிக்க கூடிய உற்சாக பானமாகும். பாலாவோரை வாழ் மக்கள் மட்டும் அல்லாது பெரும்பான்மையான திராவிட தேசமக்கள் மத்தியில் யாகங்களில் வழங்கப்படும் இறைச்சி கறியும்…
ராதா மனோகர்
-
-
1.உடல்+உள்ளம்+உலகம்+உயிர்=உன் இருப்பு மனித வாழ்வின் மர்மங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து பார்க்கும் முயற்சியை பொதுவில் யாரும் திறந்த மனதோடு அணுகுவதில்லை. அதற்கு காரணம் அதுபற்றி அவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளே. அவை அவர்களின் அறிவுத்தாகத்தை தீர்த்து கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்! இந்த நம்பிக்கைதான் அறிவுக்கு மிகப்பெரும் தடை.. பிறப்பு, இறப்பு, மறுபிறவி, உயிர், கடவுள் போன்ற விடயங்களை பற்றி சிந்திக்க தொடங்கும்போதே மதங்கள் அவை பற்றி…
-
தொடங்கியது நிழல் நாடகம்! வழுக்கியாறு குளம் கட்டும் ஆரம்ப முயற்சிகளை பாக்கியத்தம்மாள் சத்தம் போடாமல் தொடங்கினாள். வழக்கமாக செய்யப்பட வேண்டிய ஆரம்ப விழாவோ அல்லது பூசாரிகளை கொண்டு செய்யப்படும் சடங்குகளோ இன்றி வேலையை ஆரம்பித்தாள். தந்தையார் பெரியவரசுவிடமும் தாயார் பேராட்டியிடமும் மட்டும் விளக்கமாக கூறி அனுமதியை பெற்றாள். வழுக்கியாறு குளம் கட்டும் முயற்சி தூர தேசங்களுக்கு எட்டாமல் இருப்பது நல்லது என்று அவர்கள் முடிவு செய்து இருந்தார்கள். ஏறக்குறைய ஐநூறில்…
-
துரோகமும் தியாகமும்! பாலாவோரை பாலாவோரை நகரத்தை சுற்றி உள்ள முப்பது கிராமத்திலும் இன்று மிகப்பெரும் கொண்டாட்டம். கூட்டான் குலதிலகன் பேராவூரன் கட்டிய பெருவரசு அய்யனார் கோவிலுக்கு இன்றுதான் கோபுரம் கழுவல் பெருந்திருவிழா. கட்டிய கோபுரத்தில் உள்ள மண் தூசி போன்றவற்றை குடம் குடமாக நீரூற்றி கழுவதலை குடமுழுக்கு என்று பொதுவாக கூறுவார்கள்.. முக்காலும் திரைகடலை அண்மித்த திராவிட தேசங்களின் கூட்டத்தில் பாலவோரை நகரம் அல்லது பாலாவோரை என்று அறியப்பட்ட தேசம்…
-
பொய்களும் நிஜங்களும்… அன்புள்ள நண்பர்களே, இந்நூல் நிச்சயம் உங்களுக்கு ஒரு இனிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்நூல் எழுதவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்பதை சுருக்கமாக கூறுகிறேன். கட்டுரைகளாக பிளாக்கில் எழுதினேன் பின்பு முகநூலிலும் பதிவேற்றினேன். முகநூல் வழியாக எனக்கு பல நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.திரு. ஆதனூர் சோழன் அவர்களின் அறிமுகமும் இவ்வழியாகவே கிட்டியது இவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தமை பெரும் நல்வாய்ப்பாகவே கருதுகிறேன். நண்பர் ஆதனூர் சோழன்…
-
ஆரிய சதியை முறியடித்த அரசி சுமார் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாலாவோரை என்ற ஒரு அழகான ஊரில் நிகழ்ந்த புனை கதை இது. அங்கு உலாவிய மனிதர்களின் வாழ்வோடு விளையாடிய ஆரியவாதிகளுக்கும் அந்த திராவிட ஊரின் அரசுக்கும் இடையே நடந்த அதிகாரப்போட்டியை இது கூறுகிறது. இந்த ஆதிக்க அதிகார போட்டியில் சிக்கிய அரச குடும்பத்து உறவுகளும் அந்த மண்ணை நேசிக்கும் மக்களும் எப்படி ஒரு குடும்பமாக வாழ்ந்து தங்கள்…





