இந்த கரூர் கொடுமை பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டுவந்துகொண்டே இருக்கிறது. நாம் அரசியல், திரைப்படம், திரையிசைப் பற்றி கருத்துகளைப் பகிரும்போது போலி கிறிஸ்தவக் கூட்டம் ஒன்று அமைதியாகவே இருக்கும். எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும், ரசிக்கும், கருத்து வைத்திருக்கும், ஆனால் வாயைத் திறக்காது. ஏனென்றால், இவையெல்லாம் அந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரை “பாவம்“ “அசுத்தம்“ “அருவருப்பு” “கர்த்தருக்கு எதிரானவை”. அந்தக் கருத்தை நான் விமர்சிப்பதுமில்லை, அவர்களுக்கு விளக்கம் சொல்லி மாற்ற முயற்சிப்பதுமில்லை.…