புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! ராதா மனோகர் (கனடா) வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை.. இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர். திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி. தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினார். அது ஓரளவு பயனளித்தது…
திமுக
-
-
75 ஆண்டுகளாக ஒரே சின்னம் ஆதனூர் சோழன்
-
இந்த கரூர் கொடுமை பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டுவந்துகொண்டே இருக்கிறது. நாம் அரசியல், திரைப்படம், திரையிசைப் பற்றி கருத்துகளைப் பகிரும்போது போலி கிறிஸ்தவக் கூட்டம் ஒன்று அமைதியாகவே இருக்கும். எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும், ரசிக்கும், கருத்து வைத்திருக்கும், ஆனால் வாயைத் திறக்காது. ஏனென்றால், இவையெல்லாம் அந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரை “பாவம்“ “அசுத்தம்“ “அருவருப்பு” “கர்த்தருக்கு எதிரானவை”. அந்தக் கருத்தை நான் விமர்சிப்பதுமில்லை, அவர்களுக்கு விளக்கம் சொல்லி மாற்ற முயற்சிப்பதுமில்லை.…
-
பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையில் இருந்து தான் வெளி வந்ததின் விளைவாக எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறேன் என்று ஒரு பெண் காணொளி வெளியிடுகிறார். காணொளியின் துவக்கத்தில் ‘நான் ஒரு பெரியாரிஸ்ட்’ என்றே துவங்குகிறார். அதை இன்னொரு பெண் பகிர்ந்து ‘இதனால் தான் பெரியார் ட்ரோல் செய்யப்படுகிறார்’ என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அதற்கு ஆதரவாகவும் எதிர்த்தும் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தது. ஒருவருக்கு சரி என்று படும்…
-
எதிர்க்கட்சியாக திமுக தொடர்ச்சியாக இருந்த நேரம் அது. முத்தமிழறிஞர் கலைஞர் இயக்கத்தைக் கட்டுக்போப்பாக வைத்திருந்தார். ஆளுங்கட்சியை இயக்கக் கூடிய கட்சியாக திமுக வலிமையுடன் இருந்தது. அதற்கு காரணம் அதன் உறுதிமிக்கத் தொண்டர்கள். அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த திமுக அலுவலகம் ஆட்சியாளர்களால் ஒரே நாளில் அப்புறப்படுத்தப்பட்டது. பொருட்கள் வெளியே வீசப்பட்டன. திமுகவுக்கு என தனியாக ஒரு கட்டடம் கட்டியே தீருவது என உறுதி எடுத்தார் கலைஞர். தன் தொண்டர்களைத் தான்…
-
இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி நிலைக் காலத்தில்தான் அகில இந்திய தலைவர்கள் பலரைப்பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களை ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒருங்கிணைத்தார். அதுவரை சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகளை சிறையிலேயே ஒருங்கிணைத்து ஜனதாக் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார். தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான அரசு இருந்ததால் நெருக்கடி நிலையின் வெப்பம் இங்கே தடுக்கப்பட்டது. அன்றைய தமிழ் செய்தித் தாள்களில்தான் வடக்கே நடப்பவைகள் தணிக்கையின்றி…
-
சினிமால டிவில பிரபலமானவங்களை கூப்பிட்டு எம்பி சீட் கொடுக்கிறது,,,,கட்சிக்கு எந்த வகையிலும் பலன் தராது,, கோடிக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட இயக்கத்தில் 25 எம்பி சீட்டுக்கு ஆட்கள் இல்லையா,, பத்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தோம்,,15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தார் கலைஞர்,, ஒரே காரணம் தான்,,களம் சூடாக இருந்தது,,திமுக தொண்டன் நெருப்பாக இருந்தான்,,அந்த ஒரு நாளுக்காக பத்து ஆண்டுகள்,15 ஆண்டுகள் காத்திருப்பு,,, என்றாலும் தோற்றபோது வருத்தப்பட்டான்,,ஆனால் சோர்வு அடையவில்லை,, ஆனால் இன்று…
-
திமுக துணைப் பொதுச் செயலாளரான கவிஞர் கனிமொழி எம்.பி. கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். கருவறை வாசம், அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய அவருடைய கவிதை நூல்கள் புகழ்பெற்றவை. கலைஞரின் இலக்கியத் திறனை உள்வாங்கி வளர்ந்த கனிமொழியின் கவிதைகளில் பல குறிப்பிடத்தக்கவை. ராமர் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு அவருடைய அகத்திணை கவிதைத் தொகுப்பில் உள்ள ராமர் பற்றிய கவிதை வரிகளில் சில வைரலாகி இருக்கின்றன. திமுக இளைஞர் அணி…
-
பெண்களுக்கு உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள பெண்களில்… கணவன் மட்டும் சம்பாதித்து, நிரந்தர வருமானம் இல்லாத மனைவியரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் நல்லது என்பது எனது கருத்து… அரசு பணியில் உள்ள பெண்கள், தனியார் நிறுவனத்தில் நிரந்தரப் பணியில் உள்ள பெண்கள் தவிர மற்ற எல்லா பெண்களும் இந்தத் திட்டத்திற்குள் வரத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்… தினமும் கூலி வேலை செய்யும் பெண்கள், வியாபாரம் செய்யும் பெண்களுக்கு கூடுதலாகவே…
-
அவர் கைக்குழந்தையாக இருந்தபோது அவரது குடும்பம் படகில் பயணித்து, தமிழ்நாட்டில் கரை சேர்ந்தது. ஆயிற்று, 33 ஆண்டுகள். அவருக்கு தனது சொந்த நிலம் நினைவில் இல்லை. அவருக்குத் திருமணமாகி, பையன் பிறந்து, வளர்ந்து, அவருக்கும் திருமணமாகி, அந்த இணையருக்கும் கைக்குழந்தை உள்ளது. எப்போது சொந்த மண்ணுக்குத் திரும்புவோம், வந்து வாழ்கிற மண்ணில் நமக்கென்று என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வியுடன்தான் அவரைப் போல தமிழ்நாட்டில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும்…














