அடைக்கலத்துக்கும், அவன் குடும்பத்திற்கும் ஊர் பேர் தெரியாத – மொழி புரியாத அந்தப் பிரதேசத்தில் அகர்வால் தான் அடைக்கலம் அளித்திருந்தான். நன்றாக உழைக்கக் கூடிய கணவன் மனனவி, பத்து வயதுச் சிறுவன், ஆகிய மூவரும் சேர்ந்து மாதம் ஐம்பது ரூபாய்க்கு முப்பது நாளும் கல்லுடைப்பது என்பது அநியாயம்தான். எந்தச் சலுகையும், எந்த வசதியும், தொழிலாலர் நலச் சட்டங்களின் எந்தப் பிரிவும் அணுக முடியாத காட்டுப் பிரதேசம் அது. விடிந்ததிலிருந்து இருட்டுகிற…
Trending
-
-
ஒவ்வொருநாளும்… முந்தைய இரவின் புறங்கண்டுமுகிழ்த்த சிவப்புப் புது உதயம் இன்று –உறங்கியவை யாவும் விழிப்புற்றனஇழந்தவை யாவும் பெற்றுக்கொண்டனஓய்ந்தவை யாவும் இயங்கத் தொடங்கின. முந்தைய இரவின் முச்சந்திகளில்முழங்கப்பட்ட முரண்பாடுகள்முழுவதுமாய் முகமழிந்தன. விரிந்து வியாபித்தவெளிச்சப் பெருங்கடலில்சௌந்தர்யங்கள் யாவும் சங்கமித்திருந்தன. சுற்றிலும் சூழ்ந்தகாற்றின் வயிற்றில்சுகந்தச்சுமை சூல்கொண்டிருந்தது. பிரச்‘சினை’க் கழுதைகளின்பிதுரார்ஜித முதுகுகளில்வாழ்க்கைப்பொதிகள் தடங்கலின்றிப் பயணித்தன. நிச்சயமற்ற முடக்கங்களைநிரந்தர அடக்கமாயெண்ணிநொண்டி நெஞ்சினர் நொடித்துப் புதைந்தனர். நிழல் ஒற்றர்கள்நேரமொரு கண்டமும் பூரண ஆயுளுமாய் நீண்டுசூரியனை எதிர்த்திசையில் எகிறித்தள்ளப் போராடினர்.…
-
“நீங்கள் எப்படி சாமி, இங்கே வந்து சேர்ந்தீர்கள்?” என்று திகைப்போடு கேட்டான் அவன். “இப்படித்தான், உன்னைப் போல்தான்” என்று அக்கறை இல்லாதவன் போல் பதில் சொல்லி முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டேன். “என்னை மறந்து விட்டாற் போல் தெரிகிறது, நான் தெரியவில்லையா, சாமி?” என்று அவன் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன். எனக்கு அவன் யார் என்றே தெரியவில்லை. ஒருவேளை அவன் என்னை அறிந்திருக்கலாம் பட்டணத்தில் பார்த்திருக்கலாம் என்று எண்ணினேன். “நீ…


