சமீப நாட்களாக தேவதாசி என்ற வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த வரலாற்றின் கரு எங்கு உற்பத்தியாகியது? இப்போது அந்த வார்த்தைக்கு கற்பிக்கப்படுகிற கேவலமான அர்த்தம் நிஜம்தானா? என்பது பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். அதன் விளைவே இந்த வரலாற்று சுருக்கம். தேவதாசி என்பது வடமொழிச் சொல் என்கிறார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை…
ஆதனூர் சோழன்
-
-
ஜாதி என்றைக்கு தோன்றியதோ போய்த் தொலையட்டும். ஜாதிகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் பெண்கள் மாராப்பு சேலை அணிய முடியாத காலம் இருந்திருக்கிறது. அப்படி மார்புகளை மறைத்தால் வரிசெலுத்த வேண்டிய கொடுமை இருந்திருக்கிறது. இதை எதிர்த்து நாஞ்சலி என்ற பெண் தனது மார்பையே அறுத்து எறிந்து போராடியிருக்கிறார். உயர்சாதியினர் வசிக்கும் தெருவில் நடக்கக்கூடாது என்றும், உயர்சாதியினர் வரும்போது…
-
தொடரும் தொடக்கம்! நமது அன்றாட வாழ்க்கை எளிதாக மாறுவதற்கு புதிய கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை. தேவைகள் அடிப்படையில் மனிதன் புதிய விஷயங்களை கண்டுபிடிக்கிறான். காலங்காலமாக இவை படிப்படியாக நிகழ்ந்துள்ளன. மனித சமூகத்தின் முன்னேற்றம் கணிக்க முடியாத அளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது. ஒரு பகுதி மனிதனின் புதிய யோசனைகள் கடன் வாங்கப்பட்டு அல்லது காப்பியடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியுள்ளன. ஒரு காலகட்டத்தில் ஆடம்பரமாக…
-
“இன்னும் எத்தனை பேரை இந்த சுவரு காவு வாங்கப் போகுதோ” மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு சுவருக்கு முக்கியமான பங்கு இருக்கும். அந்தச் சுவருக்காக பெரிய அரசியல் சண்டையே நடக்கும். தமிழ்நாடு அரசியலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சுற்றி அதுமாதிரி ஒரு சுவரை எழுப்பி, கட்சியையே காவு வாங்குமளவுக்கு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது. முதலமைச்சர் மிகவும் நம்பிய அதிகாரிகளும், மாநிலத்தின் பல பகுதிகளிலும், கட்சிக்குள்ளும் நடக்கிற விஷயங்களை முதலமைச்சருக்கு உளவு சொல்லக்கூடிய அதிகாரிகளும்…
-
நல்லாதானே போய்க்கிட்டிருக்கு நிர்வாகம்… பிறகெப்படி நல்லாட்சிக் கனவு சிதையும் என்று இயல்பாகவே கேட்கத் தோன்றுகிறதா இல்லையா? அதுதான் இன்றைய நிலைமை. கொள்கை முடிவுகளை, சட்டத் திருத்தங்களை அமல்படுத்த முடியாத ஒரு அரசை நல்லரசு என்றோ, நல்ல நிர்வாகம் என்றோ எப்படி கூற முடியும் என்று அரசுத் துறையின் பல்வேறு தரப்பினர் புலம்புகிறார்கள். நல்ல ஆட்சி என்ற தோற்றத்தை உருவாக்கி, நல்ல முதல்வர் என்று எலைட் தரப்பினர் சமூக வலைத்தளங்களில் ஒரு…
-
வயிற்று நோயை குணப்படுத்தும் தேன் கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்றுவிடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும். வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு…
-
ஆண்மை குறைவை போக்கும் ஜாதிக்காய்! செயல்திறன் மிக்க வேதிப்பொருள்: ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.…
-
குழந்தைகளுக்கு ஆசிரியர் யார்? அதற்கு என்ன செய்வது? பள்ளியோடும் பள்ளி நடவடிக்கைகளோடும் நாம் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் பள்ளியை விட்டு வந்ததும், இன்று என்ன படித்தாய்? வீட்டுப்பாடம் என்ன கொடுத்து இருக்கிறார்கள்? என்று விசாரிக்க வேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் இயல்பாகவும் இருக்கும் போது, அவர்களது பள்ளி நடவடிக்கைகளை பாந்தமாக விசாரிக்க வேண்டும். பக்கத்தில் அமர்ந்திருக்கும் பையன் கிச்சுகிச்சு மூட்டியதில் இருந்து, கோபமாக திட்டியது வரையில்… ஆசிரியர் நடத்திய பாடத்தில்…
-
நோய் எதிர்ப்பை அதிகரிக்க மாதுளை! இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும். பழங்களில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத்…
-
குழந்தைகளுக்கு ஆசிரியர் யார்? பள்ளிக்கூட பஸ்ஸிலிருந்து இறங்கினான் சரண். மகனிடமிருந்து பேக்கை வாங்கித் தோளில் போட்டாள் சரஸ்வதி. பிறகு அவனை இடுப்பில் தூக்கி வைத்து நடந்தாள். அவ்வளவுதான். “அம்மா இனிமேல் திவ்யா பக்கத்தில் நான் உக்கார மாட்டேன். எப்பப் பார்த்தாலும் கிள்ளிக்கிட்டே இருக்கா. தருண்கிட்ட இன்னிக்கு நான் “கா” விட்டுட்டேன். வசந்தி டீச்சர் ரொம்ப மோசம்…” சரண் அடுக்கிக் கொண்டே போனான். சரஸ்வதிக்கு அவனுடைய பேச்சில் கவனம் இல்லை. வீட்டில்…











