தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு தமிழரா வந்தேறியா என்று சான்றிதழ் கொடுக்கும் வேலையை நாம் தமிழர் கட்சியினரும், சீமானும் சமீபகாலமாக செய்துவருகிறார்கள். ராமதாசுக்கு அடுத்தபடியாக சீமான்தான் இன்றைய இளைஞர்களை சாதிரீதியாக பிரிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறார். வரலாறு படிக்காத இளைஞர்களுக்கு தப்புத்தப்பாய் கதைகளை புனைந்து காமெடியை சீரியாஸாக புகட்டி வருகிறார்..
-
-
ஒருவர் வாழ்க்கையில் முன்பு ஒன்றை ஏற்பதும், பிறகு அதையே விமர்சித்து நேரெதிர் நிலையை எடுப்பதும் ஏற்படுவதுதான். அதில் ஒன்றும் பிழையில்லை. பெரியாரே, சாமியாராக காசிக்குச் சென்று அங்கே துறவைத் துறந்தவர். காந்தியத்தை ஏற்றுத் துறந்தவர். வள்ளலார், கந்தக் கோட்டத்து சண்முகத் தெய்வமணியைப் பாடிவிட்டு, சிற்றம்பலத்தைப் பாடிவிட்டு பிறகுதான் தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரை விமர்சிக்கிற பக்குவத்தைப் பெறுகிறார். பெரியார் திருக்குறளை விமர்சித்தார். எல்லோரும் புகழ்வதால் அதை அவர் ஏற்கவில்லை.…



