எகிப்தில் ஓடும் உலகின் நீளமான நைல் நதியின் மேற்கு டெல்டா பகுதியில் ஒரு பழங்காலக் கோட்டை உள்ளது. அந்தக் கோட்டைக்குள் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு குதிரையின் புதைபடிவத்தை தொல்லியில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள். இந்தக் குதிரை நடுத்தர அளவுள்ள இளம் ஆண் குதிரை என்கிறார்கள். தேரை இழுக்கவோ அல்லது வேறு ராணுவ நடவடிக்கைகளிலோ இது பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.. இந்தக் குதிரை பூட்டப்பட்டிருந்த தேரின்…


