1965ல் நான் முதல் வகுப்பு படிக்கிறேன். அலங்காநல்லூர் நடுத்தெருவின் கடைசியில் இருந்தது கூரைப்பள்ளி கூடம். பள்ளிக்கூடத்தை ஒட்டி புளியந்தோப்பு இருந்தது. வகுப்புகளுக்கு இடையே காட்போர்டு தட்டி மட்டுமே சுவராக இருக்கும். அலங்காநல்லூர் வெள்ளிமலைக் குன்றின் தொடக்கத்தில், ஊர் கடைசியில் எங்கள் பள்ளி இருந்தது. அதைத் தாண்டி, ஆண்கள் அரசு உயர் நிலைப் பள்ளி இருக்கிறது. அன்றைக்கு எங்கள் ஊரிலிருந்து ஒற்றையடி பாதையில் வரும்போதே அந்தப் பள்ளிக்கூடம் தெரியும். “அஞ்சாப்பு முடிச்சிட்டுத்தான்…
-
-
அப்பா பேரு அலங்காரம். அதோடு சாதிப் பேரும் சேத்து வரும். பள்ளிக்கூடத்திலேயே அப்படித் தான் பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஏன்னா, அப்பாவோட தாத்தா பேரு அதுதானாம். அந்தத் தாத்தாவோட பேரு பெருமாள். அதை எனது அப்பாவின் தம்பிக்கு வைத்திருக்கிறார்கள். அதுகிடக்கட்டும். அப்பாவோட பேரைச் சொல்லி அப்பத்தா உட்பட யாரும் கூப்பிட்டதில்லை. மாமனாரு பேரை சொல்லக் கூடாதில்லையா? அதுகூட பரவாயில்லங்க. அலங்காநல்லூர் என்ற பேரைக்கூட சொல்லமாட்டாங்க. அதை எப்படி கூப்புடுவாங்கனு சொல்றீங்களா? ஸ்டேஷனூரு…
-
ஊர்ச்சாமி கும்பிட்டு 15 வருஷம் ஆச்சு. கடைசியா 2007ஆம் ஆண்டு முத்தாளம்மன் கோவில், அய்யனார் கோவில் எல்லாத்தையும் புதுப்பித்து, பெயிண்ட் அடிச்சு கும்பாபிசேகம் செய்து சாமி கும்பிட்டாங்க. ஊர்ச்சாமியை வருஷா வருஷம் கும்பிடுவாங்க. அதெல்லாம் இல்லாமப் போச்சு. அதுக்குக் காரணம் என்னன்னா மொதல்ல ஒரு வருஷம் மழை பெய்யலைனா சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. மழை பெஞ்சு நல்லா வெளைஞ்சாலும் சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. அப்போவெல்லாம் நிலத்தடி கிணத்து நீரையும், ஏரி…


