சின்ன வயசுல நான் முதன்முதலில் பார்த்த சினிமா இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது. மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்தோம். அப்போ எனக்கு அஞ்சு வயசு. மதுரையில் ஆரப்பாளையம் கரிமேடு பகுதி யில் இருக்கிற மோதிலால் தெருவில் அத்தை குடியிருந்தாங்க. மாமா எல்ஐசியில் வேலை செய்தார். அப்போ எல்ஐசி ஆபீஸ் குட்செட் தெருவில் இருந்தது. அன்றைய மதுரை இப்போது மாதிரி இல்லை. வைகை ஆற்றை கடக்க வேண்டும் என்றால் கோரிப்பாளையம் மேம்பாலம் மட்டும்தான்…


