மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.இந்திய அரசியலில் யாரும் எட்டமுடியாத சாதனைகளைச்செய்தவர். காந்தி, நேரு ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்தியமக்களையும் உலகத் தலைவர்களையும் தனது அப்பழுக்கற்றநேர்மையால் கவர்ந்தவர்.விடுதலைப் போராட்டத்தில் சாதாரண தொண்டராக இருந்து,தலைவராக உயர்ந்தவர். சமுதாயத்தின் கீழ் நிலையில் இருந்து,எத்தனையோ சதிகளை முறியடித்து முன்னேறியவர். மக்கள் மனதில்நீங்காத இடம்பெற்றவர்.தனக்கு கிடைக்காத கல்வி தனது ஜனங்களுக்கு கிடைக்க வேண்டும்.சமூகத்தின் முன்னேற்றத்துக்கு கல்விதான் முக்கியம் என்பதை புரிந்தவர்.ஏழை…
சிபி பதிப்பகம்
-
-
காந்தியை ‘யூஸ்லெஸ்’ என்று தைரியமாக சாடிய நேர்மையாளர். கேட்டுப் பெறுவதல்ல விடுதலை என்று வீரமுழக்கமிட்ட நெஞ்சுரத்துக்கு சொந்தக்காரர். மக்கள் மத்தியில் விடுதலை நெருப்பை பற்றவைத்த மாபெரும் புரட்சிக்காரர். காந்தியே முன்வந்து, காங்கிரஸின் தலைவராக பரிந்துரை செய்யும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற மனித நேயர். அச்சம் என்பதே அறியாதவர். வெளிநாடுகளில் இந்திய விடுதலைக்காக ராணுவம் அமைத்து போராடியவர். இவரது மரணம் குறித்தும் மணவாழ்க்கை குறித்தும் இதுவரை தமிழில் வெளிவராத தகவல்களுடனும்…
-
பாராட்டுக்குரிய படைப்பு லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்றை, தேடித் திரட்டி, தக்க படங்களுடனும், நிகழ்ச்சி விவரங்களுடனும் எழுதியிருக்கிறார் தோழர் ஆதனூர் சோழன். பொதுவாக அமெரிக்கா என்றவுடன் ஒரு பெரிய வளமான நாடு என்றும், அது கொலம்பஸ் கண்டுபிடித்த பிறகு, குடியேறிய ஐரோப்பியர்களால் பிரமிக்கத்தக்க வகையில் கட்டிவளர்க்கப்பட்டுள்ளது என்றும் நம்பவைக்கும் வகையில், ஓரிரு வரிகளுக்குள், ஒரு நீண்ட மனிதகுல வரலாறு இதுவரை மறைக்கப்பட்டு வந்துள்ளது. அது ஒரு கண்டம் என்பதையும், அதில் பல…
-
இருபதாம் நூற்றாண்டின் படுமோசமான கொடுங் கோலர்களை பட்டியலிட்டால், நிச்சயமாக ஹிட்லருக் குத்தான் முதலிடம் கிடைக்கும். நாம் எதுவாக வேண்டும் என்று ஆழ்மனதில் விரும்புகிறோமோ, அதுவாக ஆவோம் என்பதற்கு ஹிட்லரின் வாழ்க்கை நல்ல சான்று. ஜெர்மனியை தன்னால்தான் காப்பற்ற முடியும் என்று ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர் நினைத்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹிட்லர், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார். ஜெயித்தும் காட்டினார். ஜெர்மனியைக் காப்பாற்ற வந்த தேவதூதராக தன்னை உருவகப்படுத்திக்…





