பாராட்டுக்குரிய படைப்பு லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்றை, தேடித் திரட்டி, தக்க படங்களுடனும், நிகழ்ச்சி விவரங்களுடனும் எழுதியிருக்கிறார் தோழர் ஆதனூர் சோழன். பொதுவாக அமெரிக்கா என்றவுடன் ஒரு பெரிய வளமான நாடு என்றும், அது கொலம்பஸ் கண்டுபிடித்த பிறகு, குடியேறிய ஐரோப்பியர்களால் பிரமிக்கத்தக்க வகையில் கட்டிவளர்க்கப்பட்டுள்ளது என்றும் நம்பவைக்கும் வகையில், ஓரிரு வரிகளுக்குள், ஒரு நீண்ட மனிதகுல வரலாறு இதுவரை மறைக்கப்பட்டு வந்துள்ளது. அது ஒரு கண்டம் என்பதையும், அதில் பல…


