திருநெல்வேலியில் வெளியூர்க்காரர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காலத்தால் உறைந்து போனது போல் காட்சியளிக்கும், ஒரு பழைய கடைத்தெரு ஒன்றிருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி, மாவீரன் ஊமைத்துரை முதல், சமீபத்தில் மறைந்த அறிஞர் தொ.ப வரை பலப்பல மனிதர்களை, வரலாறுகளைக் கண்டதை, கடந்ததைக், காட்டிக் கொள்ளாத பகுதி அது. பாளையங்கோட்டை தெற்கு பஜார் என்பது அதன் பெயர். அதன் கிழக்கு முனையில், குளோரிந்தா ஆலயம் என்ற ஒரு…

