கேரளத்தின் மரகத மலைகளில் மழையின் தாண்டவம் மண் சரிந்து உயிர் புதைந்து கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்குது வயநாட்டில்! மலையே! நீ ஏன் சரிந்தாய்? மண்ணே! நீ ஏன் நகர்ந்தாய்? காடே! நீ ஏன் அமைதியானாய்? கதறும் உயிர்களின் குரல்கள் காதில் விழவில்லையா? உங்கள் சீற்றத்தின் விளைவை உணர்ந்தீர்களா? இல்லை உணர்த்தினீர்களா? கனவுகள் கலைந்து, குடும்பங்கள் சிதைந்து ஏனிந்த கொடூரம்? கருணை கொஞ்சம் காட்டியிருக்கக் கூடாதா? இயற்கையின் சக்தியே! இரக்கம் வேண்டும்…
சகாய டர்சியூஸ் பீ கவிதைகள்
-
-
நெஞ்சின் ஆழத்தில் புதைந்த நினைவுகளின் நிழல்; சுழன்றடிக்கும் சூறாவளியாய் மனதினுள் வீசும் வலி. உன் பார்வை இதயத்தை எரிக்கிறது; வார்த்தைகளின் வெயிலில் உருகித்தான் போகிறேன் நான். மூச்சு சுடும் காதல் வலி கண்களின் வழியே கசியும்; சொல்ல முடியாத வரிகளாய் காதல் ரணங்கள். பிரிவு என்னும் வார்த்தையில் நின்று போன என் நிமிடங்கள்; என்னைச்சுற்றி உன் சுவாசப்பந்து, மூச்சுத் திணறுகிறேன். நிசப்த இரவுகளில் தீண்டலின்றி தொட்டு விடும் நினைவுகள்;…
-
அன்பின் வழி காட்டும் அழகிய நாள், உலகம் முழுதும் உறவாடும் பெருநாள் நாள், ஈகையின் இசை பாடும் இனிய நாள், அதுவே ஈகைத் திருநாள்… சிரிப்பின் மொழியில் செல்வங்கள் பரிமாற, இன்ப வெள்ளத்தில் இதயங்கள் நீந்தும். தன்னலம் கரைய தானம் சிறகு விரிக்க, மனிதம் மகிழ்ந்து கொண்டாட்டத்தில் நிறைந்திடும். கொடையின் சூரியன் உதயமாக, இல்லம் தோறும் இன்பம் பரவும். விண்ணில் விதைக்கும் நன்மை விருட்சமாக, கருணையின் கொடையில் நெஞ்சம் பேரின்பமாகும்.…
-
நேற்று சத்தியம் முகநூல் பகுதியில் ஒரு காணொளி பார்த்தேன் அதில் சீமான் அவர்கள், மாடு மேய்ப்பது பற்றியும் மாட்டின் சிறப்புகளையும் குறித்து வழக்கம் போல், தம்பிகளா, அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மாடு மேய்ப்பதை அரசு தொழிலாக்குவேன், முதலமைச்சராக இருந்தாலும் நான் மாட்டு தொழுவத்தில் மாட்டு வால்ல உண்ணி எடுத்துட்டு இருப்பேன் என்னை பார்க்க வருபவர்களை அங்கே வரச் சொல்லுவேன் என்று கதையளந்து கொண்டிருந்தார். அதில் மேற்கோளாக, அய்யன் வள்ளுவரின்…
-
திருநாளாம் அய்யா இது திருநாளாம் உழைப்பிற்கு நன்றி சொல்லும் தமிழரின் பெருநாளாம் சோலைகள் சூழ் கிராமம் கொண்டாடுதய்யா மலர்கள் சூடி மாடுகள் அணிவகுக்குதய்யா பொங்கல் போல் உள்ளம் பொங்குதய்யா மாடுகள் மகிழ்ச்சியில் மங்கலமாய் நிற்குதய்யா களையெடுத்து கரும்புல் நாட்டிதானய்யா கன்னிமண் சொரிந்து கருணை விளைவிக்குதய்யா மாடும் உழவும் கைகோர்க்கும் வாழ்வுதானய்யா மாடும் உழவனும் மனிதஇனத்தின் முகவரிதானய்யா விதைவிதைத்து விளைச்சலை வளர்த்தேயய்யா விருட்சமாய் நிற்கும் விவசாய வீரனய்யா பசுமை போர்வையில் படரும்…
-
அலைபேசியின் இயக்கத்தில் ஒளிரும் திரைப்பிடிப்பில் உருவாகும் ஒரு நவீன காதல் கதை! முகநூலில் முடிவற்ற அரட்டைகள் இன்ஸ்டாவின் பகிர்வுகள் இருமனங்களின் திறவுகோல்! மெல்லிய நீரோடையாய் வழிந் தோடும் குறுஞ் செய்திகள் உறவின் இணைப்புகள்! ஸ்னாப்ச்சாட் பேஸ்டைம் வாட்ஸ்அப் இணைய சுவர்களைத் தாண்டி வீசியது அலைக்கற்றையில் காதல்! நெய்யப்பட்ட கனவுகள் சிரிப்புகள் ரகசியங்கள் பகிர வளர்கிறது மெய்நிகரில் ஓர் அழகிய காதல்! ஒவ்வொரு அழைப்பும் ஒவ்வொரு உரையும் இதயம் பேசும் காதலின்…






