அலைகளின் அரசர்களே! ஆழியை ஆள்பவர்களே! விண்மீன்கள் வழிகாட்டும் இருளிலேயே வலைகளுடன் விரைந்தோடும் வீரர்களே! நீலக்கடலின் நேசர்களே – உங்கள் நாளுக்கு வணக்கம்! காற்றும் கடலும் கொந்தளித்தாலும் கண்ணீரும் உப்பும் கலந்த கரங்களால் நங்கூரம் பாய்ச்சி நம்பிக்கை விதைக்கும் நாட்டின் முதுகெலும்பு நீங்கள்! உங்கள் வலைகளில் சிக்குவது மீன்கள் மட்டுமல்ல உலகின் உணவுப் பாதுகாப்பும்தான்! உங்கள் கைகளில் இருப்பது துடுப்புகள் மட்டுமல்ல உயிர்களின் நலனும்தான்! புயலின் பேரொலியிலும் அஞ்சாது பரந்த…
சகாய டர்சியூஸ் பீ
-
-
இன்னா+இனியவை நாற்பது இன்றைக்கும் பொருந்தும் பாடல்களின் எளிமையான உரை இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரண்டு தமிழ் இலக்கிய நூல்களுக்கு புதிய கோணத்தில் உரை எழுதலாமா என்று தென்கொரியாவில் பணிபுரியம் தமிழரான கவிஞர் சகாய டர்சியூஸ் பீ கேட்டார். நானும் நல்ல யோசனைதான் எழுதுங்கள் என்றேன். ஆனால், அந்த பாடல்கள் இந்தக் காலத்திற்கும் எப்படி பொருந்துகிறது என்பதையும் குறிப்பிட சொன்னேன். ஒரே சமயத்தில் துன்பம் தரக்கூடிய 164 செய்யக்கூடாத…
-
வன்மத்திற்கும் வதந்திக்கும் இடையிலான ஆபத்தான கூட்டணி… தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நச்சு விளையாட்டு! “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற நம் முன்னோர்களின் பழமொழி இன்று சமூக ஊடகங்களில் அதிர்ச்சியூட்டும் வகையில் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், இந்த பழமொழிக்கு ஒரு புதிய பரிமாணம் சேர்ந்துள்ளது: “வன்மம் கொண்டவனுக்கு வதந்தியே துணை!” தமிழ்நாட்டின் அரசியல் சூழலை நோக்கினால், அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்களிடமும் ஒரு ஆபத்தான போக்கு வளர்ந்து வருவதை…
-
இன்னா நாற்பது – பாடல் 39 மூலம்: கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா மடுத்துழிப் பாடா விடல் சொற்பொருள்: வள்ளன்மை – கொடை தன்மை, கடித்து – கடினமான அல்லது கடித்து உண்ணும், பாக்கு – வெற்றிலைப்பாக்கு, கல் படுதல் – கல் இருத்தல், கவி – கவிஞன், மடுத்துழி – தடைப்பட்ட இடத்தில். விரிவான விளக்கம்:…
-
இன்னா நாற்பது – பாடல் 40 மூலம்: அடக்க முடையவன் மீளிமை யின்னா துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா அடக்க வடங்காதார் சொல் சொற்பொருள்: இன்னா – துன்பம் தருவது மீளிமை – செருக்கு, அகந்தை துடக்கம் – முயற்சி, தொடக்கம் வவ்வுதல் – கவர்தல், திருடுதல் ஆங்கு – அவ்விடத்து, அதுபோல அடங்காதார் – அடக்கமில்லாதவர் விரிவான விளக்கம்: முதலாவதாக, “அடக்கம்…
-
தென் கொரியாவுக்கான இந்தியத் தூதர் அமித் குமாருடன் சாகாய டர்சியூஸ் பீ கொரியா தமிழ்ச் சங்கத்தின் உள்கட்டமைப்புச் செயலாளர் திரு சகாய டர்சியூஸ் பீ சங்கத்தின் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், இனி, கொரியா தமிழ்ச் சங்கத்தின் எந்தவொரு விஷயத்திற்கும் தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். 2018ஆம் ஆண்டு முதல் கொரியா தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பயணித்தவர் சகாய டர்சியூஸ் பீ. அந்த ஆண்டு சங்கம்…
-
தென் கொரியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 162வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. ஜனவரி 12, 2025 அன்று சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் இந்திய தூதர் மாண்புமிகு திரு. அமித் குமார் மற்றும் அவரது துணைவியார் திருமதி சுரபி குமார் ஆகியோர் சுவாமி விவேகானந்தருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். மாண்புமிகு தூதர் திரு.…
-
துயரம் சூழ்ந்த இந்நாளில், இந்தியா கண்ணீர் கடலில் மிதக்கிறது, தொழில் துறையின் அரசர், ரத்தன் டாட்டா மறைந்துவிட்டார். உலகம் வணங்கும் மகாதலைவன், தொலைநோக்குப் பார்வையின் ஞானி அமைதி கொண்டான் என்ற செய்தி உள்ளத்தை உலுக்கி உறைய வைக்கிறது. எஃகைப் போல் உறுதியான தொழில்நெறி, ஏழை எளியோர் நலனுக்காய் உயிர்த்துடிப்பாய் உழைத்த பெருந்தகை, டாட்டா என்ற பெயரை உலகமெங்கும் பரப்பியவர், இந்தியாவின் பெருமைமிகு முகமானவர். நாட்டின் முன்னேற்றத்திற்காய் நாள்தோறும் கனவு…
-
விடியலின் விதைகளை விதைத்து வீழ்ந்த சமூகத்தில் வீரம் ஊட்டி சுயமரியாதை எனும் சூரிய ஒளியைப் பரப்பி பாமரனின் இதயத்தில் புரட்சித் தடம் பதித்த தமிழகத்தின் விடிவெள்ளியின் பிறந்தநாள் இன்று! மூடநம்பிக்கை முள்வேலி சூழ்ந்த மண்ணிலே முரசறைந்தார் பகுத்தறிவின் முழக்கத்தை பெண்ணடிமை கண்டு எரிமலையாய்க் கொந்தளித்து கோடிக்கணக்கான மனங்களில் விடுதலைத் தீ மூட்டினார் சாதியெனும் சாக்கடையை வேரோடு சாய்த்தொழிக்க சமத்துவத்தின் சங்கொலியாய் ஒலித்தெழுந்தார் அடக்குமுறை அரக்கர்களை…
-
அன்பின் உருவமே, எம் ஆசிரியரே!அறியாமை இருளை அகற்றிய ஒளியே கல்வி என்னும் கனியைத் தந்துகனவுகளை விதைத்த கருணையின் உருவே! சிறகற்ற பறவைக்கு சிறகுகள் தந்தீர் சிந்தனையின் உயரத்தில் சிறகடிக்க வைத்தீர் தவறுகளை தண்டித்து திருத்தம் செய்தீர் தளராத உழைப்பால் எம்மை உருவாக்கினீர் தலைவணங்கி நிற்கிறோம் தாங்கள் முன்னே தலைநிமிர்ந்து நடக்கிறோம் தாங்கள் தந்த ஞானத்தாலே உம்அன்பின் ஆழத்தை அளக்கமுடியாது உம்தியாகத்தின் உயரத்தை எட்டமுடியாது …












