உடன் பிறப்பே, அழகின் சிரிப்பாய் முகமும் – அருவியின் கீதமாய்ப் பேச்சும் ‘அங்கமோ தங்கம்’ எனும் விதத்தில் நிறமும் கொண்ட பாவை ஒருத்தியைப் பாட்டெழுதும் புலவர்கள் ‘மாம்பழ மங்கை’ என வர்ணிக்கத் தவறமாட்டார்கள்! ‘எலுமிச்சம் பழம் போல் இருக்கிறாள்’ எனச் சிறப்பித்துக் கூறும்போது, அவள் நிறம் மட்டுமே நினைவில் வரும்! ‘செந்தாமரையைப் போன்றாள்’ எனக் கவிச்சரம் தொடுக்கும் போது, அவளுடைய எழில்மிகு மென்மையான வண்ண முகமே எதிர் நிற்கும்! ‘மயிலனையாள்’…
மு.கருணாநிதி
-
-
முன்னுரை முத்தமிழறிஞர் என்றும் கலைஞர் என்றும் அழைக்கப்படும் மு.கருணாநிதி அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர். 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 75 ஆண்டுகள் தவிர்க்கவே முடியாத ஆளுமையாக வாழ்ந்தவர். திமுகவின் தலைவராக 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பொறுப்பு வகித்தார். நவீன தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களாக உள்ள திட்டங்கள், கட்டுமானங்கள் அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. அரசியல், சினிமா, நாடகம், இலக்கியம்…





