ரஜினி, கமல், அஜித், விஜய் நடித்த படம் வரும்போது முதல் காட்சி விசித்திரமா இருக்கும். அவருடைய ரசிகர்கள் அந்தந்த படங்களில் நடிகர்கள் என்ன கெட்டப்பில் வருகிறார்களோ, அதேபோல தங்களையும் மாற்றிக்கொண்டு வருவார்கள். ஒரு திரைப்படம் வந்தால், அந்த படத்தின் நாயகனாகவே மாறிவிடுவது சிறுவர்களின் மனநிலை என்பார்கள். ஆனால், இளைஞர்களிடமும் அந்த மனநிலை இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும். சினிமாவைப் பொருத்தமட்டில் நான் எப்படி இருந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். நான்…
Trending
-
-
இயற்கை மருத்துவம் – 13 நீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவை யற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவை களாக உள்ளன. நீரின் மருத்துவ தன்மைகளைப் பார்ப்போம்….. மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாகும். பனி நீரினால் வாதகோபம், வெகுமூத்திரம், சொறி சிரங்கு முதலியன போகும். மற்ற நீர்கள் அவையிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது ஆற்று…
-
சின்ன வயசுல நான் முதன்முதலில் பார்த்த சினிமா இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது. மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்தோம். அப்போ எனக்கு அஞ்சு வயசு. மதுரையில் ஆரப்பாளையம் கரிமேடு பகுதி யில் இருக்கிற மோதிலால் தெருவில் அத்தை குடியிருந்தாங்க. மாமா எல்ஐசியில் வேலை செய்தார். அப்போ எல்ஐசி ஆபீஸ் குட்செட் தெருவில் இருந்தது. அன்றைய மதுரை இப்போது மாதிரி இல்லை. வைகை ஆற்றை கடக்க வேண்டும் என்றால் கோரிப்பாளையம் மேம்பாலம் மட்டும்தான்…
-
வாழ்வியல் சிந்தனைகள் 14 நாம் வாழும் இந்த பூமியை பற்றி சரியான புரிதல்கள் நமக்கு இருக்கிறதா? இவ்வுலகிற்கு உரிய வாழும் முறை பற்றி மரங்கள் சொல்வதை விட எந்த ஒரு குருவோ அல்லது வழிகாட்டியோ சிறப்பாக சொல்லி தரமுடியாது. மரங்கள் தங்களின் சுயதர்மத்தை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுகிறது. எந்த ஒரு குரு, வழிகாட்டி அல்லது சமுகத்துக்கு நல்ல காரியத்தை செய்திருக்கும் பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை கவனித்து பார்த்தால் அவர்கள் எல்லோருமே…
-
ஒரு பெண், 80 ஆயிரம் கடற்கொள் ளையர்களுக்கு தலைமை ஏற்றிருக்கிறாள் என்றால் நம்ப முடிகிறதா? அவள் பெயர் சிங் ஷிஹ். 1800ஆம் ஆண்டு தொடக்கத்தில் இது நடந்திருக்கிறது. தெற்கு சீனாவில் உள்ள கேண்டன் நகரில் வாழ்ந்த பாலியல் தொழிலாளி சிங் ஷிஹ். குய்ங் முடியாட்சி காலத்தில் தென் சீன கடலை மிரட்டிய கடல் கொள்ளையன் முதலாம் செங் என்பவனை இவள் திருமணம் செய்துகொண்டாள். அவன் இறந்ததும் அவனுக்கு கீழ் இருந்த…
-
ஹன்னா ஸ்னெல்லுக்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது. அவளுடைய கணவரை காணவில்லை. அதுவும் ஏழு மாத கர்ப்பினியாக இருந்த சமயத்தில் காணாமல் போனார். அவர் இல்லாத நிலையிலேயே ஹன்னா குழந்தையை பெற்றாள். அவன் ஒன்றும் யோக்கியமானவன் இல்லை. அவளிடம் அன்பு காட்டியவனும் இல்லை. இருந்தாலும் அவள் பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தாள். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. இதுதான் அவளை அந்த நிலைக்கு கொண்டுபோனது. ஹன்னா ஸ்னெல்லின் தந்தை…
-
அலங்காநல்லூர் வாழ்க்கையை நினைத்தால் ரொம்ப ஜாலியாக இருக்கும். தாத்தா தொடங்கிய மரக்கடையோடு, விறகுக்கடையும் சேர்த்து வைத்தார் அப்பா. அலங்காநல்லூரிலேயே எங்கள் விறகுக்கடை மட்டும்தான் இருந்தது. பிறகு வேறு சிலர் சின்னதாய் தொடங்கினார்கள். மரம் வெட்டும்போது, சின்னக் கிளைகள் விறகுக்கு நறுக்கப்படும். மா, வேம்பு, கருவேல், சீமைக்கருவேல் விறகுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கும். ஒரு பக்கம் மரத்தை அறுப்பார்கள். மரச்சாமான்களை செய்வார்கள். இன்னொரு பக்கம் விறகு உடைப்பார்கள். சுள்ளிகள் தனியாகவும்,…
-
வாழ்வியல் சிந்தனைகள் 12 மனிதகுல வரலாறுதோறும் ஒரு தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்று கொண்டுவருகிறது. மனிதர்களின் சுயசிந்தனையை நிர்மூலமாக்கும் முயற்சிதான் அந்த யுத்தம். அதில் பெரும்பாலும் சுயசிந்தனை தோற்ற வண்ணம்தான் உள்ளது. வெளிப்பார்வைக்கு மனிதரின் சுயசிந்தனை வெற்றி பெற்று உள்ளதாக தெரிகிறது. சில சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் வெற்றியை பெற்று இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் சுயசிந்தனை தனது இருப்பை தொலைத்துவிட்டு திண்டாடிகொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏராளமான உதாரணங்கள் கூற முடியும்.…
-
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள சிறையில் சில வாரங்கள் ஆனி, மேரி, ராக்ஹாம் உள்ளிட்ட கடல் கொள்ளையர் அடைக்கப்பட்டிருந்தனர். அது வெப்பமான பகுதியாக இருந்தாலும், சிறைக்குள் குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் இருந்தது. ராக்ஹாம் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் வேகமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் அவர்களுக்கு மரணதண்டனை என்று நவம்பர் மாதம் முடிவாயிற்று. நவம்பர் 18 ஆம்தேதி காலையில் சிறையில் தூங்கிக்கொண்டிருந்த ஆனியையும்…
-
அப்பா பேரு அலங்காரம். அதோடு சாதிப் பேரும் சேத்து வரும். பள்ளிக்கூடத்திலேயே அப்படித் தான் பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஏன்னா, அப்பாவோட தாத்தா பேரு அதுதானாம். அந்தத் தாத்தாவோட பேரு பெருமாள். அதை எனது அப்பாவின் தம்பிக்கு வைத்திருக்கிறார்கள். அதுகிடக்கட்டும். அப்பாவோட பேரைச் சொல்லி அப்பத்தா உட்பட யாரும் கூப்பிட்டதில்லை. மாமனாரு பேரை சொல்லக் கூடாதில்லையா? அதுகூட பரவாயில்லங்க. அலங்காநல்லூர் என்ற பேரைக்கூட சொல்லமாட்டாங்க. அதை எப்படி கூப்புடுவாங்கனு சொல்றீங்களா? ஸ்டேஷனூரு…


