கோபாலபுரம் ஒரு சிற்றூர். சிறிது இடிந்த சிவன் கோயிலின் கோபுரம் ஊரின் கீழ்ப்புறத்திலிருக்கும் மாந்தோப்பின் மீது ரஸ்தாவின் திருப்பத்திலிருந்து பார்த்தால் தெரியும். சாயங்காலத்தில், அதாவது அஸ்தமிக்கும் செங்கோளமான சூரியனின் கிரணங்கள் மொட்டைக் கோபுரத்தின் மீதும் மாந்தோப்பின் மீதும் விழுந்து பளபளக்கும் சமயத்தில், நான் ஏன் சைத்திரிகனாகப் பிறந்திருக்கக்கூடாது என்று படும். ஊருக்கும் அந்த ரஸ்தாவுக்கும் ஏறக்குறைய அரை மைல் தூரம் இருக்கும். கோபுரத்தைத் தவிர அங்கு மனித வாழ்வின் சின்னங்களைக்…
Trending
-
-
நிமித்தகாரியின் வேட்டைக்களம்! குலதிலகனின் தூதுவர்களாக வந்த பார்ப்பனர்களிடம் புன்னகையுடன் பேசிய பாக்கியத்தம்மாள் “சரி உங்கள் கோரிக்கையை அமைச்சர்களுடனும் இதர பெரியவர்களுடனும் பேசி விட்டு கூறுகிறேன். உங்களுக்கு இரண்டு கிராமங்களை நான் தருவதால் மக்களுக்கும் எனக்கும் என்ன பயன் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டாள். உடனே அவர்கள், “பேராவூர் அரசர் குலதிலகன் நிச்சயம் தகுந்த கைம்மாறு செய்வார். அது பற்றி பின்னர் மீண்டும் பேசலாம்” என்று பதிலளித்தார்கள். இதையடுத்து அவர்களை…
-
வாகைப்பூ நான் எப்போதும் விழித்திருக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். பகலைக் கடந்து இரவுக்குள்நான்நுழையும் சமயமெல்லாம்கொடிய அரக்க உள்ளங்கள்கொதிக்கின்ற உலையாகிஎன்னைக் கவ்வ எத்தனிக்கின்றன. எவரெஸ்டில் நிலவும்பனிக்காற்றின் தழுவலாகஎன்னைப் பிணைக்கும்அன்புப்பூ சொரிகின்ற ஆத்மாக்கள்துணையோடு நான்ஒவ்வொரு உலையையும் புறமொதுக்கிஇரவுக்குள் பிரவேசிக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். நான் எப்போதும் விழித்திருப்பேன்.
-
புதுவேஷம் போட்ட பார்ப்பனர்கள்! மிகுந்த மனவருத்தத்துடன் கொல்லா நோன்பை கடைப் பிடிக்க பார்ப்பனர்கள் முடிவு செய்தனர். ஆனாலும் இந்திரன் போன்ற தேவர்களை மகிழ்விக்க காலம் காலமாக செய்யப்படும் யாகங்களை செய்யவேண்டுமே? அதற்காக வேள்வியில் மிருகங்களை பலியிடுவதற்கு பதிலாக இரத்த சிவப்பு குங்குமத்தையும் பசு நெய்யையும், தர்ப்பை புல்லால் உருவத்தை செய்து அவற்றை எல்லாம் தீயில் இட்டு பொசுக்கி தங்கள் யாகத்தை செய்யலாம் என்று முடிவெடுத்தனர். மக்களின் ஞாபக மறதியில் நம்பிக்கை…
-
யாகவேள்வியும் சோமபானமும்! அண்மைக்காலமாக வடநாடுகளில் இருந்து வருகை தந்த பார்ப்பனர்கள் கோவில்களிலும் அரண்மனைகளிலும் பர்ணசாலைகளிலும் ஆடு மாடு குதிரை போன்றவைகளை பலி கொடுத்து அதை யாகம் என்று கொண்டாடினார்கள். அந்த யாகத்தின் இறுதி நிகழ்ச்சியாக சோமபானம் வழங்கப்படும். இங்கு வழங்கப்படும் சோமபானம் மிகவும் உள்ள கிளர்ச்சி அளிக்க கூடிய உற்சாக பானமாகும். பாலாவோரை வாழ் மக்கள் மட்டும் அல்லாது பெரும்பான்மையான திராவிட தேசமக்கள் மத்தியில் யாகங்களில் வழங்கப்படும் இறைச்சி கறியும்…
-
ஜாதிக்காய் மலைத்தொடரில் வாழும் ‘பகடர்’ என்னும் பழங்குடி இனத்தவர் பற்றித் திடீரென்று அரசாங்கத்துக்கு மகத்தான அக்கறை ஏற்பட்டிருந்தது. “பகடர் இன நல்வாழ்வுக்கும், முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம். அவர் தம் மொழியையும் கலாச்சாரத்தையும் கட்டிக் காப்போம்“ – என எல்லாத் தினசரிகளிலும் முதலமைச்சரின் படத்தோடு (பகடர்களின் படத்தோடு அல்ல) பெரிய பெரிய விளம்பரங்கள் வெளி வந்திருந்தன. சமூக சீர்த்திருத்தக்காரர்களும், ஆந்த்ரபாலஜீக்காரர்களும், ஸோஷியாலஜிஸ்ட்டுகளும், புகைப்படக்காரர்களும், பத்திரிகை நிருபர்களும் ஜாதிக்காய் மலைத் தொடருக்கு ஓடி அலைந்தார்கள்.…
-
வாழ்வியல் சிந்தனைகள் – 1 மனித வாழ்வின் மர்மங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து பார்க்கும் முயற்சியை பொதுவில் யாரும் திறந்த மனதோடு அணுகுவதில்லை. அதற்கு காரணம் அதுபற்றி அவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளே. அவை அவர்களின் அறிவுத்தாகத்தை தீர்த்து கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்! இந்த நம்பிக்கைதான் அறிவுக்கு மிகப்பெரும் தடை.. பிறப்பு, இறப்பு, மறுபிறவி, உயிர், கடவுள் போன்ற விடயங்களை பற்றி சிந்திக்க தொடங்கும்போதே மதங்கள்…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனினின் முயற்சி இது… 7 முதல் 12 வரை உள்ள படைப்பு இது…
-
தொடங்கியது நிழல் நாடகம்! வழுக்கியாறு குளம் கட்டும் ஆரம்ப முயற்சிகளை பாக்கியத்தம்மாள் சத்தம் போடாமல் தொடங்கினாள். வழக்கமாக செய்யப்பட வேண்டிய ஆரம்ப விழாவோ அல்லது பூசாரிகளை கொண்டு செய்யப்படும் சடங்குகளோ இன்றி வேலையை ஆரம்பித்தாள். தந்தையார் பெரியவரசுவிடமும் தாயார் பேராட்டியிடமும் மட்டும் விளக்கமாக கூறி அனுமதியை பெற்றாள். வழுக்கியாறு குளம் கட்டும் முயற்சி தூர தேசங்களுக்கு எட்டாமல் இருப்பது நல்லது என்று அவர்கள் முடிவு செய்து இருந்தார்கள். ஏறக்குறைய ஐநூறில்…
-
“மாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை! பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே” என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர் சிலர் அடிக்கடி…


