Trending - அறிவியல்

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட எகிப்து குதிரை – ஆதனூர் சோழன்

எகிப்தில் ஓடும்  உலகின் நீளமான நைல் நதியின் மேற்கு டெல்டா பகுதியில் ஒரு பழங்காலக் கோட்டை உள்ளது. அந்தக் கோட்டைக்குள் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு குதிரையின் புதைபடிவத்தை தொல்லியில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள்.

இந்தக் குதிரை நடுத்தர அளவுள்ள இளம் ஆண் குதிரை என்கிறார்கள். தேரை இழுக்கவோ அல்லது வேறு ராணுவ நடவடிக்கைகளிலோ இது பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.. இந்தக் குதிரை பூட்டப்பட்டிருந்த தேரின் கடிவாளம் மற்றும் சேணம் சார்ந்த பாகங்களின் எச்சங்களும் அருகிலேயே கிடைத்துள்ளன. எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகத்தின் அறிக்கைப்படி, கிடைத்துள்ள தடயங்களை வைத்து பார்க்கும்போது இது அந்தக் குதிரையின் முறைப்படியான சடங்கு நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இந்தக் குதிரை அடக்கம் செய்யப்பட்ட கோட்டைக்குள் கண்டெடுக்கப்பட்ட சித்திர எழுத்துக்கள் (hieroglyphics) பொறிக்கப்பட்ட சில கல்வெட்டுகளும்  சிறைபிடிக்கப்பட்ட லிபியக் கைதி ஒருவரைச் சித்தரிக்கும் கல்வெட்டும்.

எகிப்தின் ‘ஏரிப் பகுதி’யில் (Lake District) உள்ள அப்கா (Abqaa) என்ற தொல்பொருள் தளத்தில் கண்டறியப்பட்ட இந்தக் கோட்டை, ‘புதிய முடியாட்சிக்’ காலத்தைச் (கி.மு. சுமார் 1550 முதல் 1070 வரை) சேர்ந்தது. இந்தக் கோட்டை மேற்கே விரோதப் போக்குடைய லிபியப் பழங்குடியினரிடம் இருந்து பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டது. இந்தக் கோட்டை அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில், லிபியக் கைதி ஒருவரை காட்டும் கல்வெட்டும் இருக்கிறது. அந்தக் கைதியின் ஆடை அமைப்பு, எகிப்துடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்ட ‘மெஷ்வெஷ்’ (Meshwesh) பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

கைதி தனது குனிந்த உடலுக்குப் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார். இது அவர் சரணடைந்ததைக் குறிப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பாரோ இரண்டாம் ராமேசஸின் (Ramesses II) பெயர் பொறிக்கப்பட்ட சித்திர எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் கி.மு. சுமார் 1279 முதல் 1213 வரை ஆட்சி செய்தார்.

இரண்டாவது கல்வெட்டில் பாரோ மெர்நெப்தாவின் (Merneptah) பெயர் இடம்பெற்றிருந்தது; இவர் கி.மு. சுமார் 1213 முதல் 1203 வரை ஆட்சி செய்தார். அவரது வலிமையை, பாலைவனம் மற்றும் புயல்களுடன் தொடர்புடைய பண்டைய எகிப்தியக் கடவுளான ‘செத்’ (Seth) என்பவரின் வலிமையுடன் அந்தக் கல்வெட்டில் குறிக்கப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *