ச்சும்மா ச்சும்மா செஞ்சதை சொல்லிக் காட்டிக்கிட்டே இருக்காதீங்க என்று திமுகவுக்கு அறிவுரை கூறும் ஒரு பதிவொன்றைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டேன்.
சீராட்டி, பாராட்டி வளர்த்த தாய், தந்தையையே, கிட்டிய புது சுகத்துக்காக, ஒதுக்கிச் செல்லும் சமூகத்திற்கு இத்தகைய அறிவுரைகளெல்லாம் சாபம் அல்லவா ?
சொத்துக்காக உடன் பிறந்த ரத்தச் சகோதரர்களுக்குள் வெட்டு குத்துக்கு அஞ்சாத கூட்டத்தாரிடையே, செஞ்சதை சொல்லிக் காட்டாதே என்பது எத்துணை மூட வாதம் தெரியுமா ?
சரி ஓர் ஆய்வு செய்யுங்கள்.
அறிவாளிகள் மிகுந்த (!) சென்னை மாநகருக்குள் சென்று கீழே தொடரும் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்.
1.) கல்விக்காக மதிய உணவைக் கொண்டு வந்தவர் யார் ?
2.) சத்துணவை போட்டது யார் ?
3.) குழந்தை தொட்டில் திட்டத்தை கொண்டு வந்தவர் யார் ?
4.) சென்னை மெட்ரோ, டைட்டல் பார்க், ஹூண்டாய் கார் தொழிற்சாலைகளை கொண்டு வந்தவர் யார் ?
5.) சென்னையை சிங்காரச் சென்னை என ஆக்கியவர் யார் ? தமிழ்நாட்டின் சிற்பி யார் ?
முதல் மூன்று கேள்விகளுக்கு பட் பட்டென்று பதில் வரும். நான்காவது, ஐந்தாவது கேள்விகளுக்கு பதிலளிப்பவர் திமுக அபிமானி இல்லையெனில் கேள்வியே புரியாது. அல்லது ஜெயலலிதா, மோடி என்று மிகத் தவறான பதில்கள் வரும் !

இன்னும் கஷ்டமான கேள்விகளெல்லாம் உள்ளன.
வன்னியர்களுக்கு MBC கொடுத்தவர் யார் ?
கவுண்டர்களுக்கு BC கொடுத்தவர் யார் ?
69 விழுக்காடு ஒதுக்கீட்டை BC க்கு வழங்கியவர் யார் ? அதை இறுதியாக்கியது யார் ?
அருந்ததி இன மக்களுக்கு 3% உள் ஒதுக்கீட்டை தந்தவர் யார் ?
இன்றுவரை அதைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் யாரார் ?
இந்தியாவிலேயே அதிகத் தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் எது ? யார் அதைச் சாத்தியப்படுத்தியது ?
இப்படி என்னால் 100 கேள்விகளை அடுக்க முடியும். ஆனால் குறைந்தபட்சம் அந்த ஐந்து கேள்விகளுக்காவது பதில் சொல்லச் சொல்லுங்கள் என்கிறேன்.
கலைஞர் மெட்ரோ திட்டத்தைக் கொண்டு வந்தார். அதை அவர் வண்ணாரப்பேட்டையிலிருந்து துவங்க வேண்டுமென உத்தரவிட்டார். அதுதான் மிகச் சிறப்பான ஒன்று.
பலருமே சென்ட்ரலிலிருந்து ஏர்போர்ட் வரை(இரு மாறுபட்ட பாதைகளில்) போதுமென்றே வலியுறுத்தினார்கள். வண்ணாரப்பேட்டை மிக மிக நெரிசலான பகுதி. அங்கிருந்து குடைவது பெருந்தலைவலி. ஏகப்பட்ட Oil பைப்கள் பூமிக்கடியில் ஓடுகின்றன. போக மெட்ரோ என்பது வசதியான, படித்த, நாகரீகமான மக்கள் பயணிக்க வல்லது. வண்ணாரப்பேட்டை கூலித் தொழிலாளர்கள், எளிய மக்கள் நிறைந்த பகுதி. அவர்களுக்கு மின்சார ரயில், பேருந்து, ஷேர் ஆட்டோக்கள் போதுமானவை. அங்கு அவைகள் தாராளமாக உள்ளன. பல கோடிகள் செலவு செய்து வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோவைக் கொண்டுச் செல்வது வெட்டிச் செலவு, ஃபெய்லியர் ஆகுமென கலைஞருக்குச் சொல்லப்படுகிறது !
யார்கிட்டப் போய் சொல்றாங்க பாருங்க ?
வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம் இந்த இடங்களில் கலைஞரின் காலடி படாத இடமில்லை. ராயபுரம் ராபியன்சன் பூங்காவில் துவங்கப்பட்ட திமுக, மண்ணடி பவளக்காரன் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட திமுக அலுவலகம், மின்ட், NSC Bose சாலை, லோட்டஸ் ராமசாமி தெரு என்று கலைஞர் தன் சினிமா & கட்சி சார்ந்து இளமை முழுக்க இங்கு உழன்றவர் !
எதனால் அவருக்கு வண்ணாரப்பேட்டையில் மெட்ரோவைத் துவங்க வேண்டுமென்று நன்கு தெரியும். அவர் பிடிவாதம் காட்டாவிட்டால் ஒருபோதும் வடசென்னைக்கு மெட்ரோ வரவே வராது அல்லது இப்போதைக்கு வராது என்றும் தெரியும் !
கலைஞரின் திட்டம் பலித்தது. சென்னையின் முதல் மெட்ரோ வண்ணாரப்பேட்டை to விமான நிலையம், வழி மண்ணடி, ஹைகோர்ட் பின் சென்ட்ரல் என முடிவானது !
வண்ணாரப்பேட்டைக்கே போட்டுட்டோமே அப்படியே அதை வடக்குபக்கமாக திருவொற்றியூர் வரை இழுத்தால்தான் என்ன என்று விம்கோ நகர் வரை இழுக்க, அந்த வண்ணாரப்பேட்டைதான் காரணி.
வண்ணாரப்பேட்டை to விம்கோ நகர் நெரிசலை கற்பனை கூட செய்ய முடியாது. அவ்வளவு குறுகலான சாலை. ஆனால் மக்கள் அடர்த்தி மிக அதிகம்.
சாதிக்க முடிந்தது.
அதனால் என்ன விளைந்துவிட்டது ?
லட்சாதிபதிகள் திடுக் கோடீசுவரரானார்கள். கோடீசுவரர்கள் பில்லியனர் ஆனார்கள்.
நில மதிப்பு அப்படி அப்படியே இரு மடங்கு, மும்மடங்கு என உயர்ந்ததும், மெட்ரோ வருகையால் பலருக்கு புதுப்புது வாழ்வாதாரங்கள் பெருகியதும் பக்க விளைவுகள் !

காலை ஏழு முதல் பத்து வரை விம்கோ நகர் முதல் சென்ட்ரல் & ஏர்போர்ட் வரை கூட பிதுங்கி வழிந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் இந்த மெட்ரோவை உபயோகிக்கின்றனர். மாலை வேளையும் அப்படியே. டூ வீலர், கார் வைத்திருப்பவர்கள் கூட அவைகளைத் தவிர்த்து மெட்ரோ உபயோகிப்பது இங்கு வாடிக்கை.
என்ன நோக்கமோ அது 100% நிறைவேறியது இங்குதான்.
இந்த மக்களிடம் போய் கேட்டால், ஆங் அது ஜெயலலிதா பச்சை கொடி காட்டி கட்டுனது, மோடி வந்து தொறந்து வச்சாரு, எங்களுக்குத் தெரியாதா என்ன என்று கேட்பார்கள்.
அதனால்தான் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரை ஒட்டுமொத்தமாக திமுக, தவெகவிடம் வீழ்ந்தது.
இந்த மக்களிடம் போய் நாங்கதான்டா செஞ்சோம்ன்னு சொல்லணுமா – வாணாமா ?
இதோ நாளைக்கு வடபழனி to பூந்தமல்லி போரூருக்கு மெட்ரோவைத் துவக்கி வைக்க மோடி வர்றாராம். பொட்டு மாமாதான் கொடியைத் தூக்கி கையில் கொடுக்கப் போறாராம். தற்குறிகள் அவனுக கட்டினதுன்னுல்ல சொல்வாய்ங்க ?
கிடையாது தம்பி. 2021 – 2026 வரை தன் நிர்வாகத் திறனால் ஸ்டாலினுடைய முயற்சியில், உழைப்பில் விளைந்தது அதுன்னு சொல்லத்தானே வேணும் ?
இன்னும் கொஞ்ச மாதங்களில் மாதவரம், சிறுசேரி, சோழிங்கநல்லூர்ன்னுல்லாம் மெட்ரோ ஓட ஆரம்பிச்சிடும். யார் காரணம் ?
திமுகதான் காரணம்.
திமுகதான் காரணம்ன்னு பாட புத்தகத்தில் வராது. நாமதான் திரும்பத் திரும்ப சொல்லணும்.
ஆனால் காமராஜர் கல்விக்கண் திறந்தார். மடிப்பிச்சை கேட்டு வாங்கி மதிய உணவு போட்டார். எம் ஜி ஆர் அதைச் சத்துணவாகப் போட்டார், தொட்டில் குழந்தைத் திட்டத்தைக் கொண்டுவந்து ஜெயலலிதா குழந்தைகள் அனாதை ஆவதைத் தடுத்தார். அந்தக் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போட்டார் பிஜய் டல்பாத்தி என்று மாணவர்கள் படிப்பார்கள். அது மக்கள் மண்டைக்குள்ளும் ஆழ ஊடுருவும் !
ஆனால் நாட்டை உண்மையாக மேம்படுத்திய அண்ணா, கலைஞர், ஸ்டாலின் செய்த நன்மைகளை காலா காலத்திற்கும் திமுககாரன்தான் சொல்லிக்கிட்டே கெடக்கணும்.
அதைச் சொல்லவெல்லாம் தயங்காதீங்க !!!



