அந்த விருந்து அதற்காகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடு செய்து அழைத்தவருக்கு நோக்கம் இருந்தது. அழைப்பை ஏற்று வந்தவருக்கும் அது இலைமறை காயாகப் புரிந்துதான் இருந்தது. இவருக்கு அவரிடமிருந்து ஓர் இரகசியம் தெரிந்தாக வேண்டும். அவருக்கு அந்த இரகசியம் இவருக்குத் தெரியாமல் காப்பாற்றியாக வேண்டும். இவருடைய அழைப்பின் பேரில் அவர் வந்திருந்தார். சில ராஜதந்திரக் காரணங்களுக்காக அந்த விருந்தை இவருடைய வீட்டிலோ, தூதரகத்திலோ தர முடியாமலிருந்தது. அவருக்கும் இவருடைய வீட்டுக்கோ தூதரகத்திற்கோ…
Trending
-
-
கடல்கொள்ளையில் ஈடுபட்டிருந்தபோது, ஜேம்ஸுடன் ஆனியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. நாஸாவ்வுக்கு குடியேறிய சில காலத்திலேயே இருவருக்குமான உறவு மோசமடையத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், ஜேம்ஸ், கடல்கொள்ளை வாழ்க்கையை விரும்பாததுதான். அவன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்தான். ஆனால், கடல் கொள்ளை வாழ்க்கை சுதந்திரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் ஆனி நினைத்தாள். கடல்கொள்ளையரை எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தாது. அவர்களுக்குள் வர்க்க பேதம் இல்லை. அவளுடைய வீரமும், திறமையும் மட்டுமே முக்கியமாக இருந்தது.…
-
ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாகீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து “அய்யா!” என்றான். அவன் வயது பன்னிரண்டு இருக்கும். மேலே கிழியாத சட்டை; கீழே கிழிந்த துண்டு; இரண்டும் அவ்வளவாக அழுக்குப் படவில்லை. மெலிந்த உடல்; ஆனாலும் நலம் கெடவில்லை; முகத்தில் ஒருவகை மலர்ச்சி; கண்களில் கரவற்ற நல்ல…
-
1720 ஆம் ஆண்டின் கோடைக்காலம் அது. கடற் கொள்ளையருக்கு சொந்தமான ரிவெஞ்ச் என்ற அந்தக் கப்பல் கடல் நடுவே பயணித்துக் கொண்டிருந்தது. கப்பலின் வளைவுப் பகுதியில் ஆனி போனி நின்றிருந்தாள். அழகிய சுருளான செம்பட்டை முடி காற்றில் பறந்தது. பேண்ட்டும் கோட்டும் அணிந்து ஒரு ஆணாகவே மாறியிருந்தாள். தலையில் ஒரு கைக்குட்டையை கட்டியிருந்தாள். ஏதெனும் கப்பல் தெரிகிறதா என்று வேவு பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஆணைப் போல வேடமணிந்து, தான்…


