தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக, தமிழ் மொழிக்காக பாடுபட்ட, பெண்களின் நலனுக்காக சட்டப் பாதுகாப்பு வழங்கிய கலை, இலக்கியத்தில் குறிப்பிட்த்தக்க தொண்டாற்றிய கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடமில்லை என்று தமிழக அரசு மறுத்தபோது தமிழகம் நிஜமாகவே கொந்தளித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவுக்கு எம்ஜியார் சமாதியில் இடம் கொடுத்த அரசு, தமிழக வரலாற்றில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கும், தமிழகத்தில் வேறு யாருமில்லாத…
ஆதனூர் சோழன்
-
-
தந்தை பெரியாருக்கு திருமணம் ஆனபிறகும் அவரை அவருடைய தந்தை அடித்தார். பெரியார் கோபித்துக் கொண்டு ஊர் சுற்றினார். காசி வரை போய் திரும்பினார். ஆனால், அவர் அணிந்திருந்த நகைகளை பத்திரமாக தந்தையிடம் ஒப்படைத்தார். கிட்டத்தட்ட ஒரு பிச்சாண்டியைப் போல ஞானத்தை தேடி அலைந்து திரும்பினார். அவருடைய இந்த பொறுப்புணர்வு தந்தையை மட்டுமின்றி ஊராரையும் அவர்மீது மதிப்பு கொள்ளச் செய்தது. தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளிதான் பல…
-
1969 பிப்ரவரி மாதம் 3 ஆம் நாள் அண்ணா மறைந்தார். பஞ்சாயத்து ரேடியோ எங்கள் வீட்டில்தான் இருக்கும். பேட்டரியில் இயங்கக்கூடியது. ஒரு ஸ்பீக்கர் வேறு கட்டியிருப்பார்கள். அண்ணா மரணமும், அதைத் தொடர்ந்து சோக இசையும் ஒலிக்கத் தொடங்கியது. ஊர் மந்தையில் பரபரப்பாகியது. அண்ணா படம் வைத்து அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், எல்லா ஊர்களிலும் பாடையில் ஒரு உருவ பொம்மையை வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.…
-
ஆத்திரம் அறிவுக்கு சத்ரு என்பார்கள். சர்வம் சாந்த மயம் என்று போதிப்பார்கள். புதிய ஆத்திசூடியில் ரௌத்திரம் பழகு என்றார் பாரதி. முடிவு கிடைக்காத விஷயங்களுக்கு தியானத்தில் விடிவு பிறக்கும் என்று ஆன்மீகவாதிகள் நம்புகின்றனர். அசட்டுத்துணிச்சல்தான் ஆத்திர உணர்வுக்கு மூலகாரணம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு அசட்டுத்தனமாக அமைந்து விடக்கூடும் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆத்திரம் மனிதனின் சிந்தனையை குறுக்கிவிடும். அவர்களை நெருக்கடியில் தள்ளிவிடும்…
-
பல் போனால் சொல் போகும் என்பார்கள். ஆனால், பல் போனாலும் செயற்கை பல் கட்டி சொல்லைக் காப்பாற்ற முடிந்தது. இப்போது ஆய்வுக் கூடத்திலேயே நமது பல்லை வளர்த்து, விழும் பற்களுக்குப் பதிலாக புதிய உயிருள்ள பல்லை பொருத்த முடியும் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். பொதுவாக சுறா, முதலை போன்ற பிராணிகளுக்கு பற்கள் கடைசிவரை தொடர்ந்து புதிதாக வளருகின்றன. ஆனால், மனிதர்களுக்கு ஆறு மாதங்களில் வளரத் தொடங்கும் பற்கள் 6 வயதில்…
-
ஞானி ஒருவர் வாழ்ந்தார். அவரை தனது மனக்கண்ணில் முக்காலத்தையும் அறிந்து சொல்பவர் என மக்கள் நம்பினர். குறும்புக்கார சிறுவன் ஒருவன் அவரை சோதிக்க விரும்பினான். சிறிய பூச்சி ஒன்றை தனது இரண்டு விரல்களுக்கு இடையில் பிடித்து மறைத்தபடி ஞானியிடம் போனான். “எனது விரல்களுக்கு இடையே ஒரு பூச்சி உள்ளது. அது செத்து விட்டதா? உயிரோடு இருக்கிறதா?” என்று அவரிடம் கேட்டான். ஞானி செத்துவிட்டது என்று சொன்னால் பூச்சியை உயிரோடு…
-
பினராயி விஜயனுடன் பிரகாஷ் காரத் கேரளாவில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டால் போதும் என்கிற முடிவுக்கு பிரகாஷ் காரத் வந்துவிட்டார் போல. அவருடைய நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கிறது. அனேகமாக பாஜக எதிர்ப்பை அவர் கைவிட்டுவிட்டார். கேரள கம்யூனிஸ்ட்டுகளையும் அந்த முடிவை ஏற்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டார் என்றே தெரிகிறது. மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பிரகாஷ் காரத்தின் பங்காளிகள் அனைவரும்…
-
வரலாறுகளைப் வாசிக்கும் வழக்கம் கிட்டத்தட்ட ஒழிந்துவிடும் நிலை உருவாகிவிட்டது. வரலாறுகளை வாசிப்பது என்று இல்லாமல், பொதுவாக புத்தகம் வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. வாட்ஸாப்பிலும், சமூக ஊடகங்களிலும் பரவும் இட்டுக்கட்டப்படும் தகவல்களே வரலாறுகளாக மாறும் கொடுமை அதிகரிக்கிறது. இந்நிலையில், நிஜமான வரலாறுகளை எளிமையாக பதிவு செய்ய வேண்டியது அவசியம். அப்படி ஒரு முயற்சிதான் எழுத்தாளரும் ஓவியருமான ஸ்ரீரசாவின் மானுடம் கண்ட மகத்தான புரட்சி என்ற நூல். மாபெரும் ரஷ்யப்…
-
24 வயதில் மார்க்சீயத் தோழர்களுடன் லெனின் நேவ்ஸ்கயா ஜஸ்தாவாவில் ஆலைத் தொழிலாளி பாபுஷ்கினுடைய குழுவில் விளாதிமிர் பங்காற்றி வந்தார். அதேசமயத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரின் பல பகுதிகளிலும் நிறைய மார்க்ஸீயத் தொழிலாளர் குழுக்கள் இயங்கின. விளாதிமிர் பீட்டர்ஸ்பர்க் வந்ததும் முதலில் புரட்சிகர மார்க்ஸீயவாதிகளை தொடர்பு கொள்வதில்தான் அக்கறை காட்டினார். “தோழர்களே! நாம் எல்லோரும் தொழிலாளர்களிடம் மார்க்ஸின் கொள்கைகளை பரப்ப வேண்டும். தொழிலாளர்களுடன் ஒன்று சேர்ந்து புரட்சிக்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார்…
-
நியூயார்க்கில் உள்ள கூப்பர்ஸ்டவுனைச் சேர்ந்த போர் வீரரான அப்னர் டபுள்டே என்பவர் பேஸ்பால் விளையாட்டைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. அது ஒரு கட்டுக்கதை. பேஸ்பால் விளையாட்டை கண்டுபிடித்தவர் யார் என்ற உண்மைக் கதை சிக்கலானது. கி.பி. 1800களின் முற்பகுதியில் பேஸ்பால் விளையாட்டு பல்வேறு பந்து மற்றும் குச்சி கொண்டு விளையாடும் விளையாட்டுகளில் இருந்து அது உருவாகி இருக்கலாம். இங்கிலாந்தின் கிரிக்கெட் அல்லது…








