திராவிட தேசங்களை வென்ற செருக்கு! வழுக்கியாற்றை வேடிக்கை பார்க்க போய் புத்தூர் நம்பியிடம் பிடிபட்ட பார்பனர்கள் பற்றிய செய்திகள் எதுவும் வெளி உலகிற்கு தெரியவில்லை. ஒரு மாளிகையில் கைதிகளாக ஆனால் போதிய வசதிகளோடு தடுத்து வைக்கப்பட்டார்கள். இனி தொடர்ந்து பிடிபடப்போகும் பார்பனர்களுக்கும் சேர்த்து பெரிய அளவில் சில கரந்துறை காப்பகங்கள் பாக்கியத்தம்மாளின் ஆலோசனைப்படி புத்தூர் நம்பியால் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. பாலாவோரை மக்களை ஆழம் பார்க்கவென கிளம்பிய பல பார்ப்பனர்கள் திடீர்…
ராதா மனோகர்
-
-
புத்திமான் பலவான்? புத்துவெட்டூர் நம்பி படுவேகமாக தனது நம்பிக்கைக்கு உரியவர்களை அழைத்து ஒரு ஆலோசனை குழுவை அமைத்தான். பேராவூருக்கும் பாலவோரைக்கும் ஏற்படவிருக்கும் ஆபத்து பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். ஏற்கனவே பாக்கியத்தம்மாளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பற்றி விளக்கினான். பாக்கியத்தமாளின் புத்திசாலித்தனதால் தாங்கள் எதிரி என்று கருதக்கூடிய குலதிலகனின் நம்பிக்கையை பெற்று விட்டோம். அத்தோடு .பார்ப்பனர்களின் அசைவுகள் அத்தனையும் தங்கள் பார்வையிலேயே நடைபெறுகின்றன என்றும் புத்தூர் நம்பி கூறினான். மௌன யுத்தம் ஆரம்பம்.…
-
புத்தூர் நம்பியின் வரவு பாக்கியத்தம்மாளும் அவளது ஆலோசகர்களும் என்ன தான் நுணுக்கமாக திட்டங்கள் தீட்டி பாலவோரை தேசத்தை காக்க திடசங்கற்பம் பூண்டு இருந்தாலும் அது அவ்வளவு இலகுவானதல்லவே? தேசத்தை காப்பாற்ற தம்பியை பணயம் வைக்கவேண்டி இருக்கிறதே என்ற எண்ணம் அவளை கொஞ்சம் கூட தூங்க அனுமதிக்கவில்லை. தாயும் தந்தையும் இறந்து சில ஆண்டுகள் ஆனாலும் அவளின் மனதளவில் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். சஞ்சலம் வரும்போதெல்லாம் மனதில் அவர்களிடமே கேள்விகளை…
-
வாழ்வியல் சிந்தனைகள் – 1 மனித வாழ்வின் மர்மங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து பார்க்கும் முயற்சியை பொதுவில் யாரும் திறந்த மனதோடு அணுகுவதில்லை. அதற்கு காரணம் அதுபற்றி அவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளே. அவை அவர்களின் அறிவுத்தாகத்தை தீர்த்து கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்! இந்த நம்பிக்கைதான் அறிவுக்கு மிகப்பெரும் தடை.. பிறப்பு, இறப்பு, மறுபிறவி, உயிர், கடவுள் போன்ற விடயங்களை பற்றி சிந்திக்க தொடங்கும்போதே மதங்கள்…
-
ஆரிய சதியை முறியடித்த அரசி சுமார் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாலாவோரை என்ற ஒரு அழகான ஊரில் நிகழ்ந்த புனை கதை இது. அங்கு உலாவிய மனிதர்களின் வாழ்வோடு விளையாடிய ஆரியவாதிகளுக்கும் அந்த திராவிட ஊரின் அரசுக்கும் இடையே நடந்த அதிகாரப்போட்டியை இது கூறுகிறது. இந்த ஆதிக்க அதிகார போட்டியில் சிக்கிய அரச குடும்பத்து உறவுகளும் அந்த மண்ணை நேசிக்கும் மக்களும் எப்படி ஒரு குடும்பமாக வாழ்ந்து தங்கள்…





