உயர் திரு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எனதும் எனது மனைவியின் வாழ்க்கைக்கும் விடியலாக அமையும் என இருந்த இந்த ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு வைத்துதான் எடுப்போம் எனச் சொன்னதால் அதற்கு தயாரானோம். தற்போது அதற்கு PhD அவசியம் எனச் சொன்னதால் எனது மனைவிக்கு அந்த வாய்ப்பு இல்லை ஏற்கனவே நானும் எனது மனைவியும் பத்தாண்டுகள் காத்திருக்கிறோம். இதில் ஏதோ விடிந்தது போலிருந்த இந்த அறிவிப்பிலும் இருள் சூழ்ந்து விட்டது…
-
-
பெரியாரை ஆண்கள் விமர்சிப்பதை விட பெண்கள் விமர்சிப்பது மிக அவசிய தேவையாகவே எனக்கு தோன்றும். ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, பார்ப்பன எதிர்ப்பு என்பதை எல்லாம் தாண்டி பெரியாரின் பெண்ணியத்தை மீறிய ஒரு பெண்ணிய விடுதலை பேச்சை, இன்றளவிற்கும் கூட (இந்தியாவில்) வேறு யாரும் பேசி இருப்பதாக தெரியவில்லை. பேசுவதில்லையே தவிர, பல பெண்களும் பெரியாரின்பெண்ணிய கனவினை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பெரியாரை படித்தவர்கள் இல்லை. பெரியாரை படித்த…
-
விடியலின் மெல்லிய முத்தம் போல், ஒலிவ மரத்தில் ஓர் இனம்புரியாத அமைதி வாரம்தோறும் வந்து சென்றாலும் இந்த வெள்ளி புனித நீரோடையின் ஆழ்கடலாகி அன்பின் காவியம் பாடுகிறது… அந்த கருமையான வானில் கருக்கலான சிலுவையில் அன்பின் சின்னம் தன் மக்களுக்காய் அவர்தம் பாவவிடுதலைக்காய் கொடும்துன்பத்தை விரும்பி ஏற்றது… அவரின் கைகளையும் கால்களையும் துளைத்தன நீண்ட இரும்பாணிகள்… உமிழ்நீரும் கேலிகளுக்கும் வசவுகளும் கசையடிகளும் அரங்கேற அவர் தலையில் ஏறியது முள் கிரீடம்… …
-
2014இல் அடானிஜி, அதாவது கேடிஜியின் சொத்து 50,000 கோடி. 7 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சொத்து 11.5 லட்சம் கோடியாக மாறியது. கேடி ஜி, இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு எங்கு செல்வீர்கள்? 11.5 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து. 7 வருடங்களில் உங்கள் நாட்டை இவ்வளவு கொள்ளையடித்து விட்டீர்களே! 2014 இல், 609 ஆவது இடத்தில் இருந்த அவர், தற்போது இரண்டாவது பெரிய பணக்காரராக மாறியுள்ளார். இப்போது அவர்…
-
விரட்டப்பட வேண்டியவர்களை விரட்டுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது… தேர்தல் 7 கட்டங்களாக நடப்பதும் முதல்கட்டத் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்க 45 நாட்கள் காத்திருக்க வேண்டியதும் சர்ச்சையாகி இருக்கிறது… இந்தியா குடியரசாகி முதன்முதல் நடைபெற்ற பொதுத்தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்கள் நடைபெற்றது… அதுதான் மிக அதிகமான நாட்கள் நடைபெற்ற தேர்தல்… அதற்கு அடுத்தபடியாக 2014 மக்களவை தேர்தல்தான் ஏப்ரல் 7 முதல் மே 12…
-
8000 சமணர்களின் கழுவேற்றம் பற்றிய தகவல்களை நம்மில் பலரும் அறிந்துள்ளோம்.ஆனால், சோழர்களின் பழைய தலைநகராக விளங்கிய பழையாறையில் சமணர்களின் பொதுப்பள்ளிக் கூடத்திலிருந்த 1000 சமணர்களை திருநாவுக்கரசர் வேண்டியபடி பல்லவ மன்னன் வேரோடு அழித்த செய்தியை அறிந்தவர்கள் மிகக் குறைவே. 1000 சமணர்கள் அழிவின் பிண்ணனி: திருமறைக்காட்டுத்(வேதாரண்யம்) தலத்தில் ஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசரும் இருந்தபோது, பாண்டிய நாட்டிலிருந்து ஞானசம்பந்தருக்கு அழைப்பு வந்தது. ஞானசம்பந்தர் பாண்டிய நாடு செல்ல முடிவு செய்தார்,நாவுக்கரசுப் பெருமான்…
-
போதைப் பொருட்களுக்காகப் பொங்குற தமிழ்நாடு அரசாங்கம் சாராயக்கடையை மட்டும் நடத்தலாமானு ரொம்ப பெரிய அறிவாளிக மாதிரி சிலர் கேள்வி கேட்கிறாங்க… உலகத்துல இருக்க அரசாங்கங்கள் எல்லாமே சாராயத்துக்கு அனுமதியும் போதைப்பொருட்களுக்கு மரண தண்டனையும் கொடுக்கிறாங்கனா என்ன அர்த்தம்? இது இரண்டுக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்குனு தெரியாதா?. உண்மையைச் சொல்லனும்னா உலகத்துல இருக்க பெரிய பெரிய அரசியல் தலைவர்கள்ல தொடங்கி பெரும் தொழிலதிபர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் சுய தொழில்…
-
முன்னுரை முத்தமிழறிஞர் என்றும் கலைஞர் என்றும் அழைக்கப்படும் மு.கருணாநிதி அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர். 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 75 ஆண்டுகள் தவிர்க்கவே முடியாத ஆளுமையாக வாழ்ந்தவர். திமுகவின் தலைவராக 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பொறுப்பு வகித்தார். நவீன தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களாக உள்ள திட்டங்கள், கட்டுமானங்கள் அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. அரசியல், சினிமா, நாடகம், இலக்கியம்…
-
நான் எங்கு சென்றாலும் அருகிலிருக்கும் ஏதோ ஒரு பூங்காவிற்கு சென்று பார்ப்பதுண்டு. அங்கே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வோர் இருப்பார்கள். சில வயதானவர்கள் அரசியலை தீவிரமாக அலசிக் கொண்டிருப்பார்கள். மற்றொரு பக்கம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பழைய பென்சன் திட்டம் அல்லது ஜேக்ட்டோ ஜியோ போராட்டம் குறித்து காரசாரமாக பேசிக் கொண்டிருப்பார்கள். அது எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் அதற்கு எதிராகத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு பக்கம்…
-
மே 11, 1932 இந்தியாவில் ஹூணர்கள் துரத்தப்பட்டாலும் சில இடங்களில் இருக்கிறார்கள். பாலாதித்தியனுக்குப் பிறகு குப்த வம்சம் மங்கி மறைகிறது. வட இந்தியாவில் பல சிறு அரசுகள் தோன்றுகின்றன. புலிகேசி என்ற மன்னன் தெற்கே சாளுக்கியப் பேரரசை அமைக்கிறான். கான்பூருக்கு அருகில் கன்னோஜி என்ற பெரிய நகரம் இருந்தது. அது கிராமமாக இருந்து தலைநகராக மாறி, இப்போது மீண்டும் சிறிய கிராமம் போல இருக்கிறது. நாம் பேசுகின்ற நாளில் கன்னோஜி…










