துயரம் சூழ்ந்த இந்நாளில், இந்தியா கண்ணீர் கடலில் மிதக்கிறது, தொழில் துறையின் அரசர், ரத்தன் டாட்டா மறைந்துவிட்டார். உலகம் வணங்கும் மகாதலைவன், தொலைநோக்குப் பார்வையின் ஞானி அமைதி கொண்டான் என்ற செய்தி உள்ளத்தை உலுக்கி உறைய வைக்கிறது. எஃகைப் போல் உறுதியான தொழில்நெறி, ஏழை எளியோர் நலனுக்காய் உயிர்த்துடிப்பாய் உழைத்த பெருந்தகை, டாட்டா என்ற பெயரை உலகமெங்கும் பரப்பியவர், இந்தியாவின் பெருமைமிகு முகமானவர். நாட்டின் முன்னேற்றத்திற்காய் நாள்தோறும் கனவு…
கவிதைகள்
-
-
விடியலின் விதைகளை விதைத்து வீழ்ந்த சமூகத்தில் வீரம் ஊட்டி சுயமரியாதை எனும் சூரிய ஒளியைப் பரப்பி பாமரனின் இதயத்தில் புரட்சித் தடம் பதித்த தமிழகத்தின் விடிவெள்ளியின் பிறந்தநாள் இன்று! மூடநம்பிக்கை முள்வேலி சூழ்ந்த மண்ணிலே முரசறைந்தார் பகுத்தறிவின் முழக்கத்தை பெண்ணடிமை கண்டு எரிமலையாய்க் கொந்தளித்து கோடிக்கணக்கான மனங்களில் விடுதலைத் தீ மூட்டினார் சாதியெனும் சாக்கடையை வேரோடு சாய்த்தொழிக்க சமத்துவத்தின் சங்கொலியாய் ஒலித்தெழுந்தார் அடக்குமுறை அரக்கர்களை…
-
அன்பின் உருவமே, எம் ஆசிரியரே!அறியாமை இருளை அகற்றிய ஒளியே கல்வி என்னும் கனியைத் தந்துகனவுகளை விதைத்த கருணையின் உருவே! சிறகற்ற பறவைக்கு சிறகுகள் தந்தீர் சிந்தனையின் உயரத்தில் சிறகடிக்க வைத்தீர் தவறுகளை தண்டித்து திருத்தம் செய்தீர் தளராத உழைப்பால் எம்மை உருவாக்கினீர் தலைவணங்கி நிற்கிறோம் தாங்கள் முன்னே தலைநிமிர்ந்து நடக்கிறோம் தாங்கள் தந்த ஞானத்தாலே உம்அன்பின் ஆழத்தை அளக்கமுடியாது உம்தியாகத்தின் உயரத்தை எட்டமுடியாது …
-
கேரளத்தின் மரகத மலைகளில் மழையின் தாண்டவம் மண் சரிந்து உயிர் புதைந்து கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்குது வயநாட்டில்! மலையே! நீ ஏன் சரிந்தாய்? மண்ணே! நீ ஏன் நகர்ந்தாய்? காடே! நீ ஏன் அமைதியானாய்? கதறும் உயிர்களின் குரல்கள் காதில் விழவில்லையா? உங்கள் சீற்றத்தின் விளைவை உணர்ந்தீர்களா? இல்லை உணர்த்தினீர்களா? கனவுகள் கலைந்து, குடும்பங்கள் சிதைந்து ஏனிந்த கொடூரம்? கருணை கொஞ்சம் காட்டியிருக்கக் கூடாதா? இயற்கையின் சக்தியே! இரக்கம் வேண்டும்…
-
விடியலின் மெல்லிய முத்தம் போல், ஒலிவ மரத்தில் ஓர் இனம்புரியாத அமைதி வாரம்தோறும் வந்து சென்றாலும் இந்த வெள்ளி புனித நீரோடையின் ஆழ்கடலாகி அன்பின் காவியம் பாடுகிறது… அந்த கருமையான வானில் கருக்கலான சிலுவையில் அன்பின் சின்னம் தன் மக்களுக்காய் அவர்தம் பாவவிடுதலைக்காய் கொடும்துன்பத்தை விரும்பி ஏற்றது… அவரின் கைகளையும் கால்களையும் துளைத்தன நீண்ட இரும்பாணிகள்… உமிழ்நீரும் கேலிகளுக்கும் வசவுகளும் கசையடிகளும் அரங்கேற அவர் தலையில் ஏறியது முள் கிரீடம்… …
-
காலம் சிதைத்த கனவுகள் என, வரலாறு கனிந்து கூறிடும். விதியின் விளையாட்டில் வீழ்ந்தோர் என, வேதங்கள் மெல்லப் பாடிடும். ஆராய்ந்து பார்க்கையில், துரோகம், ஏமாற்றம் நிழலாய் ஆடிடும்! உழைப்பின் சுரண்டல்கள் கண்டு முறித்துவிடாதே உன் மனதை, உன் திறமை உன்னை வழிநடத்தும். ஏமாற்றத்தின் நிழல் கண்டு முடக்கிவிடாதே திறமையை, காலத்தின் கற்பிதம் மனதில் கொள்! தடைகள் சூழ நின்றாலும் கண்ணீரின் ஆழத்தை கடந்து செல், கனவுகள் மெய்ப்படும். துரோகத்தின் வலிகள் …
-
தமிழின் காவலன், அண்ணா நீ, மேடைதோறும் புரட்சியாய் உன் சொற்கள் மக்கள் இதயம் கீற… உயிர்ப்பித்தாய் திராவிட இயக்கம் தனை… கல்வியின் சொல்லாடல், உன் வார்த்தைகள்… அறிவின் நெய்தல் உன் மொழிகள்… உன் பேச்சில் எண்ணங்கள் உயர்வாக விழித்தன தமிழரின் மனங்கள்… மதராஸ் பெயர் மறைந்து தமிழ்நாடு உதித்தது உன் தீர்க்கமான முடிவால்…. உன் இருமொழிக் கொள்கை தமிழரின் விளக்காக தமிழும் ஆங்கிலமும் அறிவின் சுடராக… இந்தியின்றி கல்வியில் உயர்ந்தது…
-
வாழ்க்கை சொல்லாத கதைகள் பேசும் ஒரு வானம் கனவுகள் கை கோர்க்கும் ஓர் அற்புத பயணம், உன் காலடியில் பயணம் தொடங்கும், கால்தடங்கல் மேல் காயங்கள் பேசும்… எதிர்வரும் சவால்கள் வெற்றிக்கான அழைப்புகள் இழந்திடாதே உன் மனதிடத்தை நின்று போராடு உயர்ந்து நில்… மேகங்கள் அழுதாலும் மழை வந்திடும் கண்ணீர் முத்துக்கள் தாண்டி வானவில் தோன்றிடும்… மழையில் நனைந்து புயலில் வீசப்பட்டாலும் தளராதே உன் நம்பிக்கை வேர்கள் ஆழமாய் நிலைத்திருக்கட்டும் …
-
திருநாளாம் அய்யா இது திருநாளாம் உழைப்பிற்கு நன்றி சொல்லும் தமிழரின் பெருநாளாம் சோலைகள் சூழ் கிராமம் கொண்டாடுதய்யா மலர்கள் சூடி மாடுகள் அணிவகுக்குதய்யா பொங்கல் போல் உள்ளம் பொங்குதய்யா மாடுகள் மகிழ்ச்சியில் மங்கலமாய் நிற்குதய்யா களையெடுத்து கரும்புல் நாட்டிதானய்யா கன்னிமண் சொரிந்து கருணை விளைவிக்குதய்யா மாடும் உழவும் கைகோர்க்கும் வாழ்வுதானய்யா மாடும் உழவனும் மனிதஇனத்தின் முகவரிதானய்யா விதைவிதைத்து விளைச்சலை வளர்த்தேயய்யா விருட்சமாய் நிற்கும் விவசாய வீரனய்யா பசுமை போர்வையில் படரும்…
-
உறையூரில் உதித்து தமிழ் கடலில் மூழ்கி தமிழரின் தனித்துவத்தை வரலாற்றை எடுத்தளித்தவர் உலகத்தமிழன் ஒரிசா பாலு ஆமையின் வழித்தடம் கொண்டு தமிழரின் உலகதொடர்பு காணவிழைந்து தமிழ் கொரிய பண்பாடுகள் கலிங்க தமிழ் தொடர்புகள் உலகநாடுகளில் தமிழ்ப்பெயர்கள் தமிழ் கடலோடிகள் சூழியல் அறிவினையும் குமரிக்கண்டத்திற்கான தேடலின் விதையும் விதைத்து வாழும் வரை தமிழன்னை புகழ்சாற்றிய நாவாய் இன்று தமிழன்னை காலடி சேர்ந்துவிட்டது சோகத்தின் நிழலில் இதயம் கனத்தாலும் துக்கத்தின் சாரல் நமை…






