வரும் 2026 தேர்தலில் பிஜெபி அணி வெற்றிபெற பொய்யாக கூட ஒரு காரணம் சொல்லமுடியாத அளவிற்கு அரசியல் செய்தாக வேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால் ஓட்டைத்திருடி ஜெயித்தபிறகு இதனால்தான் ஜெயித்தோம்னு கட்டுக்கதைகளை அவுத்துவுடுவானுக. அப்படியான கட்டுக்கதைகள் கூட கிடைக்கமுடியாமல் செய்யவேண்டிய நிலையில் இந்திய தேர்தல்கள் தள்ளப்பட்டிருக்கின்றனனு சொன்னால் அதெப்படினு கேட்பவர்களுக்காக ..
Re-Engineering or Reverse Engineeringனு சாஃப்ட்வேர் ப்ராஜெக்ட்களில் சொல்வாங்க.
எப்டினா சாஃப்ட்வேர் வெற்றிகரமா ஓடிட்டிருக்கும். ஏதாவது ஓனர்ஷிப் சேஞ்சோ அல்லது மாடிஃபிகேஷன் அல்லது அப்கிரேட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணும் போது டிசைன் டாக்குமென்ட்ஸ் இருக்காது. என்ன தேவைகளோடு, ரூல்ஸோடு அது உருவாக்கப்பட்டு என்னென்ன மாடூயூல்கள் இருக்குங்கிற மாதிரியெல்லாம் தெரிஞ்சாதான் அந்த சாஃப்ட்வேர் மேல கைவைக்கமுடியும். இல்லனா ஊத்தி மூடிட்டு புதுசாதான் டெவலப் பண்ணனும். உலகின் பல நாடுகளில் ரன் ஆகும் பேங்க், கார் கம்பெனிகள், ரிடெயில், டெலிகாம் போன்ற தொழில்களில் புதுசால்லாம் பண்றது பல கோடி செலவு வைக்கும்.
வழி ரிவர்ஸ்-எஞ்சினீரிங்தான்.
இத பொதுமக்கள் தெரிஞ்சிகிட்டு என்ன பண்ணப்போறாங்கனுதானே கேக்கப்போறீங்க.
அரசியல்ல அப்படி ஒரு ரிவெர்ஸ் எஞ்சினீரிங்கை பிஜெபி உருவாக்கியிருக்கு.
உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன். காலம் காலமா நாம திமுகவுக்காக பேசும் போது… 1. சாவுகளை வைத்து அல்லது சாவுகளை திமுக மீது பழிபோட்டு.. 2.திமுகவுக்கு எதிராக ஒன்றுமேயில்லாத சர்க்காரியா முதல் 2G வரை ஊழல்னு நரேட்டிவ் செட் பண்ணி… பொய் புரட்டு பேசிப்பேசித்தான் அதிமுகவால் வெற்றிபெற முடிந்தது.
அடுத்து பிஜெபியும் இப்படி இந்தியா முழுதும் தனது சோசியல் மீடியா மஃபியாவை வைத்து பொய் பரப்பி அல்லது புல்வாமா, சட்டிஷ்கர் மாவோயிஸ்ட்கள் தாக்குதல்.. அல்லது அஸாம் போன்ற மாநிலங்களில் பங்களாதேஷிகள் இருக்கிறார்கள் அல்லது இந்துக்களுக்கு ஆபத்து… அல்லது ராமர் கோவில் கட்றோம்னு சொல்லி பரப்பி மக்களை நம்பவைத்து வெற்றி பெறுகிறார்கள்னு சொல்றோம்.
இதை அப்படியே ரிவர்ஸ் எஞ்சினீரிங் பண்ணுங்க. அதாவது ஓட்டையெல்லாம் திருடி வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டு அதற்கான காரணத்தை சும்மாவாச்சும் நரேட்டிவ் செட் பன்றாங்கனு யோசிங்க.
பீஹார்ல ஓட்டுத்திருடி ஜெயிச்சிட்டு பிரஷாந்த் கிஷோரை வைத்து 10000 கொடுத்ததால் ஜெயிச்சாங்கனு நரேட்டிவ் செட் பண்ணி அதை ஊடகம் ஊடகமாக பேசி.. டிபேட் வச்சி… ஓஹோ இதனால்தான் பிஜெபி ஜெயிச்சிருக்குனு நம்பவைக்க ட்ரை பண்றாங்க. ஊடக நக்கிகளும் நூல் பிடிச்சிகிட்டு நூல் மாறாம பேசறானுக பாருங்க. அதாவது தேர்தல் பரப்புரையை தேர்தல் முடிந்தபிறகு செய்யறாங்க. அப்படியே தலைகீழாக இருக்கில்ல. இதை நீங்க நம்பிட்டா அதுதான் பிஜெபி பெறும் வெற்றிகளின் ரிவர்ஸ் எஞ்சினீரிங்.
மக்கள் ஏன் நம்பவேண்டும். மக்கள் நம்பாதபோது இலங்கை, பங்களாதேஷ், நேபால் போல உள்ள பூந்து ஒதைப்பாங்க. பொதுமக்களை ராணுவம் வந்தால் கூட கட்டுப்படுத்த முடியாதுனு தெரியாத அளவுக்கெல்லாம் மோடி, அமித்ஷா முட்டாள்கள் இல்லை.
2014லிருந்து Every single election in India is rigged. The opposition only wins where the fraud machine couldn’t keep up — where their lead was simply too massive to stuff, delete, or flip, or where the usual rigging infrastructure wasn’t in place. Everywhere else, the result is pre-cooked; democracy is just the costume they wear on voting day.
நான் எனது பணியாக நினைப்பது முடிந்தவரை அதிமுக-பிஜெபி மற்றும் அல்லக்கைகள் நரேட்டிவ்ஸ் எதையும் செட் பண்ண விடக்கூடாது மற்றும் ஓட்டுகளை திருடாமல் மோடியால் டெபாசிட் கூட வாங்கமுடியாது என்பதை மீண்டும், மீண்டும் பேசி, எழுதி பதிவு செய்வது மட்டுமே. திமுகவிற்கு அதன் தொண்டர்களும், ஆதரவாளர்களும் மிகப்பெரும் அளவில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இது புரிந்த விஷயம்தான். அதை கோர்வையான ஒரு டாக்குமென்ட்டாக இங்கு பதிவு செய்திருக்கிறேன்.


