சந்தேகம் கொள்.. கேள்வி கேள்.. சிக்னல்களை சரியாக புரிந்து கொள்.. அழகை ரசிக்கும் ஆற்றல் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் ஆண் பெண் கவர்ச்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உயிரனங்களின் வாழ்வுக்கும் அதற்கேற்ற வசதிக்கும் உரியதாக இன்றளவும் உலகம் இருக்கிறது. இன்று நாம் நம்பிக்கை வைத்து பின்பற்றி வரும் கோட்பாடுகள் அல்லது வாழ்க்கை முறை எல்லாம் எப்படி உருவானது? பெரும்பாலும் இயற்கையின் அடிப்படை விதிகளை தூக்கி எறிந்து விட்டு…
கட்டுரைகள்
-
-
சீமா தனது கணவர் தேவிந்தர் மிஸ்ராவுடன் ‘மாப்ள.. ஃபோன மக கிட்ட கொடுங்க பேசனும்…’ ‘ஏன் மாமா அவ கடைக்குப் போயிருக்கா. அவள பிறகு ஃபோன் பண்ண சொல்றேன்…’ ‘என்னங்க.. என் மக மாசமா இருக்கிறா. இதோட பத்து தடவ.. ஒரு மாசமா.. நான் போன் பண்ணும் போதுலாம் அவ வீட்ல இல்ல.. இப்போ பேச முடியாதுனு சாக்கு போக்கு சொல்றீங்க. அன்னைக்கு பேரன் அம்மா ரொம்ப நாளா ஆஸ்பத்திரில…
-
https://www.uthayamugam.com/2024/01/1.html https://www.uthayamugam.com/2024/01/2.html உலகம் முழுவதும் காளைகள் பங்கேற்கும் விளையாட்டுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. வன விலங்குகளாக திரிந்தவற்றை மனிதன் வீட்டு விலங்குகளாக பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்தே இதுபோன்ற விளையாட்டுகளும் தொடங்கியிருக்க வேண்டும். நாய்கள் கி.மு.13 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் வீட்டு விலங்காகவும் வேட்டைக்காகவும் ஓட்டப்பந்தையங்களுக்காகவும் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் சேவை செய்வதற்காகவும் சண்டையிடுவதற்காகவும் காவல்காற்பதற்காகவும் இறைச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டன. வெள்ளாடு கி.மு. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆசியாவில் வீட்டு…
-
2017 செப்டம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் மர்மமாகவே இருந்தன. சுமார் 80 நாட்களுக்கு மேல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். டிசம்பர் 5ம் தேதி அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஜல்லிக்கட்டு சம்பந்தமான போராட்டங்களை நடத்த முடியவில்லை. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் முடிந்த சில நாட்களில் ஜல்லிக்கட்டு தொடர்பான செய்திகள் மீண்டும் முக்கியத்துவம்…
-
நேற்று சத்தியம் முகநூல் பகுதியில் ஒரு காணொளி பார்த்தேன் அதில் சீமான் அவர்கள், மாடு மேய்ப்பது பற்றியும் மாட்டின் சிறப்புகளையும் குறித்து வழக்கம் போல், தம்பிகளா, அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மாடு மேய்ப்பதை அரசு தொழிலாக்குவேன், முதலமைச்சராக இருந்தாலும் நான் மாட்டு தொழுவத்தில் மாட்டு வால்ல உண்ணி எடுத்துட்டு இருப்பேன் என்னை பார்க்க வருபவர்களை அங்கே வரச் சொல்லுவேன் என்று கதையளந்து கொண்டிருந்தார். அதில் மேற்கோளாக, அய்யன் வள்ளுவரின்…
-
விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா என இப்போதும் உருட்டிக்கொண்டு இருக்கிறது சமூக ஊடகமும், காட்சி ஊடகமும். அதில் முக்கியமானது விஜயகாந்த் தினமும் சோறு போட்டார். யாருக்கு சோறு போட்டார்? என்கிற கேள்வியை இதுவரை யாரும் எழுப்பவில்லை. விஜயகாந்த்துக்கு முன்பே நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர் க்கும் இதே வரியை சொல்லி கொண்டாடினார்கள். தினமும் சோறு போட்டார். யாருக்கு போட்டார் எம்.ஜி.ஆர்? தன்னை பார்க்க தினமும் ராமாவரம் தோட்டத்திற்கு வந்த ரசிகர்களுக்கு…
-
தந்தை பெரியார் அவர்கள் மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருந்து வருகிறது. மேலும், இச்சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும், பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும், சிலவித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன என்று குறிப்பிடுகிறார். தமிழ் எழுத்துகளில் மாற்றம் கொணர வேண்டும் என்று…
-
மதுரையில் தனது அலுவலகத்தில் இருந்தார் வழக்கறிஞர் சாஜிசெல்லன். அவரைப்பார்க்க ராமநாதபுரத்திலிருந்து முனியசாமி என்பவர் வந்திருந்தார். கமுதி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் அவர். தனியன்கூட்டம் என்ற இடத்தில் ரேக்ளா ரேஸ் நடத்துவதற்கு அனுமதி கேட்டு வழக்க தொடர்வதற்காக சாஜிசெல்லனை பார்க்க அவர் வந்திருந்தார். “ரேக்ளா ரேஸுக்கு அனுமதி வாங்குவது பெரிய விஷயமில்லை. ரிட்பெட்டிஷன் போட்டுறலாம்” என்று சாதாரணமாகச் சொன்னார் சாஜி. அது 2006ம் ஆண்டு மார்ச் மாதம். முனியசாமியும் வக்கீல்…
-
1526ல், ஆப்கானிய சுல்தானை பாபர் தோற்கடித்தார். அதையடுத்து இந்தியாவில் ஒரு புது சகாப்தமும் ஒரு புதிய பேரரசும் தொடங்கியது. அந்தப் பேரரசு இடையில் சிலகாலம் போக, 1526லிருந்து 1707 வரை, அதாவது 181 ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலத்தில், அது ஆற்றலும் பெருமையும் பெற்றிருந்தது. இந்திய மொகலாயப் பேரரசரின் பேரும் புகழும் ஆசியா, ஐரோப்பா முழுவதும் பரவியது. அந்த வம்சத்தில் ஆறு பெரிய பேரரசர்கள் வந்தார்கள். அதற்குப் பின் அது…
-
தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மொழியியல் விருதும் ரூ.2 லட்சத்துக்கான கசோலையும் வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்தது. புதுவை மாநிலத்தை சேர்ந்த முனைவர் ஆரோக்கியராஜுக்கு 2024 ஆம் ஆண்டு 12ம் தேதி அமைச்சர்கள் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் இந்த விருதையும் கசோலையையும் வழங்கினார்கள். முனைவர் ஆரோக்கியராஜ் விருது பெற்ற செய்தியை அறிந்து அவருடன் 25…









