பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர். எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள் வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர். உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான்…
கட்டுரைகள்
-
-
வாழ்வியல் சிந்தனைகள் – 18 Stephen Hawking says humanity is inching closer to demise, and we are to blame. “We are not going to stop making progress, or reverse it, so we have to recognize the dangers and control them. I’m an optimist, and I believe we can,” he said. எமது…
-
அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் பிறந்தவர்… நாவல் ஆசிரியர்… மிகச் சிறந்த நாடக ஆசிரியர், திறனாய்வாளர்… நகைச்சுவையாளர்… விமர்சகர்… இறை மறுப்பாளர்… புத்தி கூர்மைமிக்க நகைச்சுவை கிண்டல்காரர்… மத கோட்பாடுகளுக்கு எதிரானவர்… அரசியல் ஆர்வலர்… பேச்சாளர்…. மேதை என பலராலும் புகழப்படுகிறவர்… கார்ல் மார்க்ஸின் பொதுவுடைமைத் தத்துவத்தால் பெரிதும் கவரப்பட்டு பேபியன் கழகம் என்ற அமைப்பில் சேர்ந்து சோஷலிசக் கருத்துகளை பரப்பியவர்… தனது 94 வயது வரை எழுதியவர்…. நோபல்…
-
மாமன்னன் திரைப்படத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள். அவரவர் பார்வையில் படத்தின் நிறைகுறைகளை மாய்ந்து மாய்ந்து எழுதிவிட்டார்கள். எழுதியவர்கள் எல்லோருமே, திராவிட இயக்கங்களில் எல்லா நிர்வாகிகளுமே மனிதனை மதிக்காதவர்கள் என்பதுபோல சித்தரிக்கிறார்கள். திராவிட இயக்கம் வளர்த்த சமூகநீதி லட்சணம் இவ்வளவுதானா என்பதைப் போல கிண்டல் செய்கிறார்கள். பொது மேடைகளில் கால்களில் விழுந்தும், சாலைப் பயணங்களில் டயர்களை தொட்டும் கும்பிடும் குருசாமிகளை வளர்த்துவிட்டு செத்துப் போன எம்ஜியாரையும், ஜெயலலிதாவையும்…
-
(ஒரு ஆண்டுக்கு முன்னே நாம் நல்ல நோக்கத்தோடு சொன்னோம்… யாரு கேக்குறா…) உலகத்துலேயே வேறு எங்கும் இல்லாத கொடுமையெல்லாம் தமிழ்நாட்டில்தான் நடக்கும். தனியார் ஸ்டோர்களில்கூட எல்லாப் பொருட்களையும் எம்ஆர்பி ரேட்டிலிருந்து குறைத்து கொடுப்பார்கள். ஆனால், இங்கேதான் அரசாங்கமே நடத்துகிற மதுக்கடைகளில்கூட பாட்டில் எடுத்துத் தருவதற்கே குவார்ட்டருக்கு 5 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. பில்லும் கொடுக்க மாட்டார்கள். கேட்கிற சரக்கும் கொடுக்க மாட்டார்கள். எந்த சரக்காக இருந்தாலும், அதாவது,…
-
1807 பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி முதல் 1976 கலைஞர் ஆட்சி வரை இரு நாடுகளுக்கு இடையில் ஓடும் நதி நீரை பகிர்ந்துகொள்வதில்கூட சிக்கல்கள் ஏற்பட்டதில்லை. ஆனால், இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையில் ஓடுகிற நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்கமுடியாமல் தவிக்கிற தவிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரீயா, தெற்கு சூடான், சூடான்,…
-
சமீப நாட்களாக தேவதாசி என்ற வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த வரலாற்றின் கரு எங்கு உற்பத்தியாகியது? இப்போது அந்த வார்த்தைக்கு கற்பிக்கப்படுகிற கேவலமான அர்த்தம் நிஜம்தானா? என்பது பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். அதன் விளைவே இந்த வரலாற்று சுருக்கம். தேவதாசி என்பது வடமொழிச் சொல் என்கிறார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை…
-
புத்தமதம், சமண மதம் குறித்து புதிய சர்ச்சைகள் தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. தொல்.திருமாவளவனின் பேச்சு இந்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவர் அப்படி தவறாக என்ன சொல்லிவிட்டார்? “அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தார்கள். அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்றும், அங்கு இருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு பாபர் மஸ்ஜித்தை கட்டினார்கள் என்றும் கூறினார்கள். ராமர் பிறந்ததற்கு ஏதேனும் சான்று இருக்கிறதா என்று நாம் கேட்கவில்லை. அவர் பிறந்திருந்தால்தானே நாம்…
-
ஜாதி என்றைக்கு தோன்றியதோ போய்த் தொலையட்டும். ஜாதிகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் பெண்கள் மாராப்பு சேலை அணிய முடியாத காலம் இருந்திருக்கிறது. அப்படி மார்புகளை மறைத்தால் வரிசெலுத்த வேண்டிய கொடுமை இருந்திருக்கிறது. இதை எதிர்த்து நாஞ்சலி என்ற பெண் தனது மார்பையே அறுத்து எறிந்து போராடியிருக்கிறார். உயர்சாதியினர் வசிக்கும் தெருவில் நடக்கக்கூடாது என்றும், உயர்சாதியினர் வரும்போது அவர்கள் கண்ணில் படக்கூடாது…
-
ஜூன் 3. தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள். அவரை விமர்சித்தவர்கள் கூட அவரிடம் பாராட்டிய அம்சங்கள் நிறைய. எழுத்தில் குறைகள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுகிற அவரே பிடித்திருந்தால் மனம் திறந்து பாராட்டுவார். பிரபல வார இதழில் ‘நதிமூலம்’ என்கிற தொடரை ஆரம்பித்தபோது கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கும், திருவாரூருக்கும் சென்றிருந்தேன். அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் சந்தித்து எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்து, தனிப்புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்தது.…









