தண்டனை.. நான் உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்காதே… தண்டனையாக.. என்னை.. உன் இதயத்தில்.. சிறை வைத்துவிடு…
கதை – கவிதை
-
-
தானா, அப்படி எல்லாம் வளைந்து கொடுத்து அங்கே வந்து அடங்கித் தங்கியிருக்கிறோம் என்று மறுபடி நினைத்த போது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன்னை அந்தப் பெரிய மாளிகைக்குள் சிறை வைத்து விட்டார்களோ என்று பயமாகவும் இருந்தது. எரிச்சலாகவும் இருந்தது. கூண்டிற்குள் எலியைப் பிடிப்பதற்காக மாட்டி வைக்கும் வடைத் துண்டு போல் தான் தனக்கும் அதில் ஆசை காட்டப்பட்டு விட்டதோ என்று அவனுக்குத் தோன்றியது. வறுமையின் கொடுமை தன்னையும் அதற்குத் துணியச்…
-
சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக் கோடியில் முற்றுப் புள்ளி வைத்த மாதிரி கிழக்கே பார்த்த சிவன் கோயில்.அங்கு கோவில் கொண்டருளிய சிவனாரும், அவ்வூர்வாசிகள் போலத்தான்.கூறுசங்கு தோல் முரசு கொட்டோ சையல்லாமல்சோறுகண்ட…
-
பனிபடர்ந்த இமய மலை முகடுகளில் சிரித்து தென் குமரியின் அலைகளில் பாதங்களை நனைத்து மகிழ்ந்த பாரதமாதா மணிப்பூரின் மலை காடுகளில் சீரழிக்கப்படுகிறாள் காவிகள் கால் வைத்த மாநிலங்களிலெல்லாம் களங்கப்படுத்த படுகிறாள்! அன்று லங்காவை எரித்து அழித்த வானரங்கள் இன்று மணிப்பூர் திரும்பி விட்டனவோ? காவி போதை தலைக்கேறிய காட்டேரிகளின் கோர தாண்டவம்.. கொடும் பாவிகளால் குதறப்பட்ட பெண்கள், நம் மகள்கள், தங்கைகள், சகோதரிகள்… அங்கே ஆடையின்றி அம்மணமாகியது மொத்த…
-
மணிப்பூரில் மரணஓலம் எழுபத்தொன்பது நாள் மௌனம் கலைத்த காணொளி…. நாடே கொந்தளிக்கும் நிலையில் தமிழகத்தில் ஓர் மரணமுட்டு … இலங்கையில் இனப்படுகொலை கண்ணீர்வடித்தாயா எனும் வடிவில்… இந்தமுட்டு ஒன்றும் புதிதில்லை அதிபரின் அரசியல் புரிந்தவருக்கு…. அதிபரின் துடிப்பு ஒன்றும் ஈழ பாசம் இல்லை படியளக்கும் எசமான் மீதான விசுவாசம்…. 2009-க்கு முன்புவரை ஈழ விடுதலைக்கு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத அதிபரெல்லாம் ஈழ பாடமெடுப்பது காலத்தின் கொடுமை ஈழம் காப்பவராக காட்டிக்கொள்ளும்…
-
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள சிறையில் சில வாரங்கள் ஆனி, மேரி, ராக்ஹாம் உள்ளிட்ட கடல் கொள்ளையர் அடைக்கப்பட்டிருந்தனர். அது வெப்பமான பகுதியாக இருந்தாலும், சிறைக்குள் குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் இருந்தது. ராக்ஹாம் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் வேகமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் அவர்களுக்கு மரணதண்டனை என்று நவம்பர் மாதம் முடிவாயிற்று. நவம்பர் 18 ஆம்தேதி காலையில் சிறையில் தூங்கிக்கொண்டிருந்த ஆனியையும்…
-
ஆனியின் கணவன் ஜேம்ஸ் கொல்லப்பட்டான். இது பஹாமஸ் கவர்னரான வுட்ஸ் ரோஜர்ஸுக்கு அதிர்ச்சியளித்தது. கடல் கொள்ளையர்களை ஒழித்துக் கட்ட உறுதியாக இருந்த அவனுக்கு, ஜேம்ஸ் மரணம் பீதியை ஏற்படுத்தியது. அவன் தனது நடவடிக்கையை வேகப்படுத்தினான். அவர்களை வேட்டையாட திறமைவாய்ந்த தனியார் நிறுவனங்களை ஏற்பாடு செய்தான். அமெரிக்காவின் முக்கியமான பத்திரிகைகளில் கடல் கொள்ளையர்களை பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து விளம்பரம் செய்தான். குறிப்பாக, ஆனி மற்றும் மேரி குறித்து கடுமையாக எச்சரிக்கை…
-
ஆனியின் முன்கதையும், மேரி ரீடின் முன்கதையும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. ஆனியும் ஜேம்ஸும் பஹாமஸ் வந்த அதேசமயத்தில் தான் மேரி ரீடும் அங்கே வந்து சேர்ந்திருந்தாள். ஆனியைப் போலவே மேரியும் சட்டவிரோதமான உறவில் பிறந்தவள்தான். அவளும் இங்கிலாந்தில் ஒரு ஆண் குழந்தையைப் போலவே வளர்க்கப் பட்டிருந்தாள். மேரியின் தந்தை இறந்ததும், அவளுடைய தாய், கப்பலோட்டி ஒருவருடன் வாழத் தொடங்கினாள். அந்த உறவில் பிறந்தவள்தான் மேரி. அவளுடைய தாயின் முந்தைய…
-
அந்த விருந்து அதற்காகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடு செய்து அழைத்தவருக்கு நோக்கம் இருந்தது. அழைப்பை ஏற்று வந்தவருக்கும் அது இலைமறை காயாகப் புரிந்துதான் இருந்தது. இவருக்கு அவரிடமிருந்து ஓர் இரகசியம் தெரிந்தாக வேண்டும். அவருக்கு அந்த இரகசியம் இவருக்குத் தெரியாமல் காப்பாற்றியாக வேண்டும். இவருடைய அழைப்பின் பேரில் அவர் வந்திருந்தார். சில ராஜதந்திரக் காரணங்களுக்காக அந்த விருந்தை இவருடைய வீட்டிலோ, தூதரகத்திலோ தர முடியாமலிருந்தது. அவருக்கும் இவருடைய வீட்டுக்கோ தூதரகத்திற்கோ…
-
கடல்கொள்ளையில் ஈடுபட்டிருந்தபோது, ஜேம்ஸுடன் ஆனியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. நாஸாவ்வுக்கு குடியேறிய சில காலத்திலேயே இருவருக்குமான உறவு மோசமடையத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், ஜேம்ஸ், கடல்கொள்ளை வாழ்க்கையை விரும்பாததுதான். அவன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்தான். ஆனால், கடல் கொள்ளை வாழ்க்கை சுதந்திரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் ஆனி நினைத்தாள். கடல்கொள்ளையரை எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தாது. அவர்களுக்குள் வர்க்க பேதம் இல்லை. அவளுடைய வீரமும், திறமையும் மட்டுமே முக்கியமாக இருந்தது.…





